டி.ஏ.என்.சி.ஏ.,-2021 | Kalvimalar - News

டி.ஏ.என்.சி.ஏ.,-2021செப்டம்பர் 04,2021,22:29 IST

எழுத்தின் அளவு :

தமிழகத்தில், பல்வேறு முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘தமிழ்நாடு காமன் அட்மிஷன்ஸ்’- டி.ஏ.என்.சி.ஏ., எனும் ஒற்றை சாளர முறையிலான கலந்தாய்வு வாயிலாக நடைபெறுகிறது. இந்த கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலைக்கழகம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது.படிப்புகள்:


எம்.இ., 


எம்.டெக்., 


எம்.ஆர்க்., 


எம்.பிளான்., கால அளவு: 


முழுநேர படிப்புகள்: 4 செமஸ்டர்கள் - 2 ஆண்டுகள்


பகுதிநேர படிப்புகள்: 6 செமஸ்டர்கள் - 3 ஆண்டுகள்கல்வி நிறுவனங்கள்:


அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், பல்கலைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தகுதிகள்:


இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். மேலும் டான்செட் - 2021 அல்லது கேட் - 2019 / 2020 / 2021 நுழைவுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும்.பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை ‘லேட்ரல் எண்ட்ரி’ முறையில் சேர்க்கை பெற்று, நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் தொலைநிலைக் கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் மற்றும் குறிப்பிடப்பட்ட கல்வி தகுதியை பெறாத மாணவர்கள் ஆகியோர் இந்த கலந்தாய்வில் பங்கேற்க தகுதியில்லை.துறைகள்:


ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பார்மசி, பிளானிங், நானோ சயின்ஸ் உட்பட ஏராளமான பாடப்பிரிவுகள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த கலந்தாய்வில் பங்கேற்று, விருப்பமான பாடப்பிரிவு மற்றும் கல்லூரியை தேர்வு செய்ய, https://tanca.annauniv.edu/tanca21/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: 


இணையதள முகவரி: www.annauniv.edu


தொலைபேசி: 044 - 2235 8401, 8402 


இ-மெயில்: tanca2021@annauniv.eduAdvertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us