காமன் அட்மிஷன் டெஸ்ட் | Kalvimalar - News

காமன் அட்மிஷன் டெஸ்ட்ஆகஸ்ட் 24,2021,19:29 IST

எழுத்தின் அளவு :

நாட்டின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற எழுத வேண்டிய முக்கிய தகுதி தேர்வு, ’கேட்’ என்ற ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’


கல்வி நிறுவனங்கள்:

‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் - ஐ.ஐ.எம்.,’ உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஏராளமான 'பிசினஸ் ஸ்கூல்ஸ்’, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும், ‘கேட்’ மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை வழங்குகின்றன.


ஐ.ஐ.எம்., வளாகங்கள்:

அகமதாபாத், கல்கத்தா, போத்கயா, பெங்களூர், லக்னோ, இந்தூர், கோழிக்கோடு, ஷில்லாங், ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், திருச்சிராப்பள்ளி, உதய்பூர், அமிர்தசரஸ், சம்பல்பூர், விசாகப்பட்டிணம், ஜம்மு, நாக்பூர், சிர்மார் மற்றும் காஷிப்பூர் ஆகிய நகரங்களில், அந்தந்த ஊரின் பெயரிலேயே இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 


படிப்புகள்:

எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்.ஏ., (போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட்) மற்றும் எப்.பி.எம்., (பெல்லோ புரொக்ராம் இன் மேனேஜ்மெண்ட்) போன்ற பல்வேறு மேலாண்மை படிப்புகள்.


யார் எழுதலாம்?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


தேர்வு முறை:

கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட் (சி.பி.டி.,) முறையில், ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், 180 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வில்,  மூன்று பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது.


முதல் பகுதி: வெர்பல் எபிலிட்டி மற்றும் ரீடிங் காம்பிரிஹென்சன்

இரண்டாம் பகுதி:  டேட்டா இன்டர்பிரிடேஷன் அன்ட் லாஜிக்கல் ரீசனிங்

மூன்றாம் பகுதி: குவான்டிடேட்டிவ் எபிலிட்டி 


விபரங்களுக்கு: www.iimcat.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us