சி.யு.சி.இ.டி., | Kalvimalar - News

சி.யு.சி.இ.டி.,ஆகஸ்ட் 24,2021,19:13 IST

எழுத்தின் அளவு :

நாடு முழுவதிலும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு, ‘சென்ட்ரல் யுனிவர்சிட்டீஸ் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’- சி.யு.சி.இ.டி., 


இந்திய அரசின் சார்பில், மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., இத்தேர்வை நடத்துகிறது. 


துறைகள்:

வேதியியல், உயிர் அறிவியல், கணிதம், இயற்பியல், நூலக அறிவியல், வணிகவியல், உளவியல், கணினி அறிவியல், புவியியல், தோட்டக்கலை, நுண் உயிரியல், புள்ளியியல், வரலாறு, தொடர்பியல், வணிக நிர்வாகம், இசை, தமிழ், இந்தி, ஆங்கிலம், பொருளாதாரம், மேலாண்மை, சட்டம், யோகா, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் வழங்கப்படும் படிப்புகள்.


கல்வித் தகுதி: மாணவர்கள் விண்ணப்பிக்கும் படிப்பு மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். 


பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்:

அசாம் பல்கலைக்கழகம்- சிலிச்சர், ஆந்திர பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம், குஜராத் மத்திய பல்கலைக்கழகம், ஹரியானா மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், கேரளா மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், சவுத் பிகார் மத்திய பல்கலைக்கழகம், மற்றும் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.


தேர்வு விபரம்:

மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை, ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகளுகளுக்கான மாணவர் சேர்க்கை, இத்தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 


இதுவரை காகித அடிப்படையிலான எழுத்துத்தேர்வாக நடத்தப்பட்ட இத்தேர்வை இந்தாண்டு என்.டி.ஏ., ஏற்று நடத்துவதால், முதல்முறையாக கம்ப்யூட்டர் அடிப்படையில் நடைபெற உள்ளது. ’மல்டிபில் சாய்ஸ்’ வடிவில் கேள்விகள் இடம்பெறும். 


தேர்வு நேரம்: 120 நிமிடங்கள்; காலை 10 மணிமுதல் 12 மணிவரை மற்றும் பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை என இரண்டு ’ஷிப்ட்’களில் இத்தேர்வு நடைபெறுகிறது.


விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விபரங்களுக்கு: https://cucet.nta.nic.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us