மேட் தேர்வு | Kalvimalar - News

மேட் தேர்வுஜூலை 27,2021,22:51 IST

எழுத்தின் அளவு :

வணிகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான 1988ம் ஆண்டு துவக்கப்பட்ட ஒரு தரப்படுத்தப்பட்ட தகுதித்தேர்வான ‘மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ 2003ம் ஆண்டு, இந்திய அரசின் அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஒரு தேசிய அளவிலான தேர்வாக அங்கீகரிக்கப்பட்டது.


உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஏராளமான வணிகப் பள்ளிகள் 'மேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்  மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்தியாவில் மட்டும் 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இத்தேர்வு அடிப்படையில் மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றன. 


கல்வித் தகுதி: இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.


தேர்வு வடிவம்:

லேங்குவேஜ் காம்ப்ரிகென்ஷன், இன் டெலிஜென்ஸ் அண்ட் கிரிட்டிக்கல் ரீசனிங், மேத்மெடிக்கல் ஸ்கில்ஸ், டேட்டா அனலைசிஸ் அண்ட் சப்பீசியன்சி மற்றும் இந்தியன் அண்ட் குளோபல் என்விரான்மெண்ட் ஆகிய 5 பகுதிகளில் தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 


தேர்வு நேரம்: 150 நிமிடங்கள்


தேர்வு முறைகள்: பொதுவாக, கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் காகிதம் வாயிலான எழுத்து தேர்வு என இரண்டு முறைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இவை தவிர, ஆன்லைன் வாயிலாகவும் தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது, கம்ப்யூட்டர் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் பிரத்யேகமாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு, மாணவர்கள் நேரடியாக சென்று தேர்வு எழுதவேண்டும். ஆனால், ஆன்லைன் வாயிலான தேர்வை மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டே உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதலாம்.


தேர்வு மையங்கள்: காகித வடிவிலான எழுத்துத்தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நாடுமுழுவதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறுகிறது.


தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

எழுத்துத்தேர்வு: ஆகஸ்ட் 29

கம்ப்யூட்டர் தேர்வு: ஆக்ஸ்ட் 14

ஆன்லைன் தேர்வு: செப்டம்பர் 4


தேர்வு நடைபெறும் நாள்

எழுத்துத்தேர்வு: செப்டம்பர் 5

கம்ப்யூட்டர் தேர்வு: ஆக்ஸ்ட் 21

ஆன்லைன் தேர்வு: செப்டம்பர் 12


விபரங்களுக்கு: https://mat.aima.in/sep21/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us