மும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன?
ஏப்ரல் 27,2008,00:00 IST
ஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேசன்ஸ்
, பப்ளிக் ரிலேசன்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ், அட்வர்டைசிங் மார்க்கெட்டிங், டிஜிடல் அனிமேசன், டிவி வீடியோ புரடக்சன் ஆகியவற்றில் இந்த நிறுவனம் டிப்ளமோ படிப்புகளைத் தருகிறது.
இவற்றில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும்
. இது தவிர பப்ளிக் ஸ்பீக்கிங், பிராட்காஸ்டிங்கம்பியரிங்டப்பிங், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, கிரியேடிவ் ரைட்டிங் போன்றவற்றில் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இவை அனைத்துமே நேரடி படிப்புகள் தான்
. பொதுவாக ஜூன் மாதம் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. மிகச் சிறந்த கல்வி நிறுவனம் என்பதால் கடும் போட்டி இருக்கிறது. முழு விபரங்களை அறிய இன்டர்நெட் முகவரி: http://www.xaviercomm.org