இஸ்ரோவின் இலவச சான்றிதழ் படிப்பு | Kalvimalar - News

இஸ்ரோவின் இலவச சான்றிதழ் படிப்புஜூலை 02,2021,17:48 IST

எழுத்தின் அளவு :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் டேராடூனில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங், பள்ளி மாணவர்களுக்கான இலவச குறுகியகால சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.


ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம் அறிவியலில் தரமான கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் நோக்கில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் 1966ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது.


படிப்பின் முக்கியத்துவம்

ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் ’சுற்றுச்சூழல் படிப்புகளில் ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம் பயன்பாடு’ எனும் தலைப்பில் கோடைகால குறுகிய சான்றிதழ் படிப்பை ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுகிறது.


படிப்பு விபரங்கள்

ஜூலை 26 முதல் 30ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி மற்றும் நண்பகல் 12 மணி என இரண்டு அமர்வுகள் இருக்கும். ஒவ்வொரு அமர்விலும் 45 நிமிடங்களுக்கு துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். www.youtube.com/user/edusat2004 எனும் ஐ.ஐ.ஆர்.எஸ்.,ன் யூடியூப் சேனல் வாயிலாக பாடங்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாணவர்கள் தங்களது சந்தேகங்களை யூடியூப் சேட் பாக்ஸ் வாயிலாக பதிவிடலாம். 


சான்றிதழ்

பாடங்களின் இடையே கேட்கப்படும் கேள்விகளில் குறைந்தது 55 சதவீத கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே சான்றிதழ் வழங்கப்படும்.


தகுதிகள்

இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியில் 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இச்சானிறழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்கும் முறை: https://eclass-intl-reg.iirs.gov.in/schoolregistration எனும் இணையதளம் வாயிலாக கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். 


இணையதள முகவரி: www.iirs.gov.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us