பி.காம்., படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம் | Kalvimalar - News

பி.காம்., படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம்ஜூன் 24,2021,08:59 IST

எழுத்தின் அளவு :

உயர்கல்வி சேர்க்கையில், பிளஸ் 2 வணிகவியல் பாடத்தை தேர்வு செய்யும் பெரும்பாலான மாணவர்களின் முதல் சாய்ஸ் பி.காம்., பட்டப்படிப்பாகவே உள்ளது.


வங்கிகள், காப்பீடு, நிதி, தொழில்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளன. பி.காம்., படிப்பில் சேர, அனைத்து கல்லுாரிகளிலும் கடுமையான போட்டி எப்போதும் இருக்கும். அப்படி என்னதான் இருக்கிறது இப்படிப்பில், என்னென்ன தகுதி தேவை என விளக்குகிறார் அரசு கல்லுாரி பி.காம்., துறைத்தலைவர் சிவ சுப்பிரமணியம்.


யாரெல்லாம் படிக்கலாம்?


பிளஸ் 2 வகுப்பில் கணக்குபதிவியல், வணிகவியல் படித்த மாணவர்கள் மற்றும் தொழிற்படிப்பில், ஆடிட்டிங் அக்கவுண்டன்சி படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பிளஸ் 2 தொழிற்படிப்பு முடித்து வரும் மாணவர்களுக்கு அரசாணையின் படி, 20 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது.


பாடப்பிரிவுகள்


பி.காம்., என்ற பாடத்துக்கு எப்போதும் மவுசு அதிகம். இதன் கிளையாக, கலை, அறிவியல் கல்லுாரிகளில், பி.காம்., சி.ஏ., பி.காம்., பி.ஏ., பி.காம்., பேங்கிங் அனலிடிக்ஸ், பி.காம்., பினாசியல் சிஸ்டம், பி.காம்., பாரின் டிரேடு, பி.காம்., ரீடெயில் மார்க்கெட்டிங் உட்பட 20க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள் உள்ளன. 


வேலைவாய்ப்புகள்


பி.காம்., படித்து எம்.காம்., பி.எட்., படித்து பள்ளிகளிலும், பி.எச்டி., முடித்து கல்லுாரிகளிலும் ஆசிரியராக சேரலாம். தவிர, வங்கிகள், காப்பீடு, நிதி, தொழில்துறை நிறுவனங்களின் கணக்கியல் பிரிவுகள், மார்க்கெட்டிங், ஐ.டி., துறை என, வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளன.


தனியார், அரசு துறைகளில் பெரிய பதவிகளை வகிக்க விரும்புபவர்கள் கட்டாயம் தனித்திறமை, தேசிய, சர்வதேச மொழிகள், தொடர்பு மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் வணிகம் என்பது முழுமையாக தொழில்நுட்ப உதவியில் தான் இருக்கும் என்பதால், பி.காம்., படிக்கும் மாணவர்கள், முதல் ஆண்டில் இருந்து, 'கோடிங் ஸ்கில்ஸ்' ஆன்லைன் மூலம் தனியாக படிக்கவேண்டும். 


தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப கணினி தொழில்நுட்பங்களை கட்டாயம் படிக்கவேண்டும். உரிய திறமையுடன் இப்பட்டப்படிப்பை முடித்தவர்கள் உலக வங்கிகளிலும் பணியை பெறலாம். பி.காம்., பட்டப்படிப்பு முடித்து ஆடிட்டர் (சி.ஏ.,) படிப்பை எளிதாக முடித்து, பெரிய நிறுவனங்களில் அதிகாரிகளாக பணிவாய்ப்பை பெறலாம். 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us