புதிய சவால்களால் உருவாகும் புதிய வாய்ப்புகள் | Kalvimalar - News

புதிய சவால்களால் உருவாகும் புதிய வாய்ப்புகள்ஜூன் 24,2021,08:48 IST

எழுத்தின் அளவு :

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: 


பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள் மிகப் பெரிய அளவில் உருவாகி வருகின்றன. கடந்த ஆண்டுகளிலும் சரி, இந்த ஆண்டும் சரி நிறைய தொழில் நிறுவனங்கள் இளம் பட்டதாரிகளை பணிக்கு எடுத்துவருகிறார்கள். ஆகவே, இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா? என்ற சந்தேகம் இன்றைய மாணவர்களுக்கு தேவை இல்லை. 

எப்போதெல்லாம், சவால்களும், பிரச்னைகளும் வருகிறதோ அப்போதெல்லாம், பலவிதமான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதன்படி, தற்போதைய பெருந்தொற்று சூழலில் ஆன்லைன் கல்விக்கான தொழில்நுட்பம், மருத்துவம், பயோமெடிக்கல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் உபகரணங்கள் கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு, புதுவிதமான தேவைகளுக்கு ஏற்ப புதுப்புது வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. 


டேட்டா சயின்ஸ் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக் செயின், சோலார் எனர்ஜி, 5 ஜி தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வில்.எஸ்.ஐ., ஐ.ஓ.டி., சிப்ஸ் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, எலக்ட்ரிக்கல் மற்றும் தானியங்கி வாகனங்கள், டிரோன் தொழில்நுட்பம், வேளாண் சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் என கம்பயூட்டர், கம்யூனிகேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் அனைத்து துறைகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள், குறிப்பாக தரமான வாய்ப்புகள் அதிகளவில் உருவாகிவருகின்றன. 


இளைஞர்கள் இவற்றை உணர்ந்து, அவற்றிற்கு ஏற்ப தங்களை தயார் படித்திக்கொள்ளவேண்டும். அப்போது, வேலை வாய்ப்பு மட்டுமின்றி, சுயமாக தொழில் துவங்கி மற்றவர்களுக்கும் வேலை அளிக்க முடியும். இன்ஜினியரிங்கில் எந்த துறையை எடுத்து படித்தாலும் இதர துறை சார்ந்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய தகுதியுடய மாணவர்களை தான் இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. 


உதாரணமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்கள் பேங்கிங், நிதி சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் போது அவர்களுக்கு, அந்த துறை சார்ந்த அறிவு நிச்சயம் இருந்தால் மட்டுமே, அவர்களால் தேவையான மென்பொருள் தயாரிக்க முடியும்.  மெக்கானிக்கல் துறை மாணவரகள் படிக்கும் போதே 'கம்ப்யூட்டர் கோடிங்’ கற்றுக்கொண்டார்கள் என்றால், நாளை தொழில் நிறுவனங்களில் பணியில் அமரும் போது, அவர்களுக்கான அங்கீகாரம் உயரும்; வாய்ப்புகளும் விரிவடையும். 


தொழில்நுட்ப அறிவையும், இதர திறன்களையும் இன்ஜினியரிங் படிக்கும்போதே வளர்த்துக்கொண்டால் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் உயரிய இடத்தை அடைய முடியும் என்பதை உணர்ந்து, எங்கள் கல்வி நிறுவனத்தில் தொடர் கற்றலை புரிய வைக்கிறோம். இன்றைய பெருந்தொற்று காலத்தை முறையாக பயன்படுத்தி, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் துறை சார்ந்த நிபுணர்களை ஆன்லைன் வாயிலாக மாணவர்களுடன் கலந்துரையாட செய்கிறோம். மேலும், ஆன்லைன் வழி கல்வி, இ-லேர்னிங் மற்றும் சுய கற்றலின் தேவையையும், அவசியத்தையும் இன்றைய மாணவர்கள் நன்கு உணர்த்தி வருகிறோம். மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், பேராசிரியர்களுக்கும் மிகப்பெரும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. 


இன்று கொரானா காரணமாக, பல குடும்பங்களில் பெற்றோருக்கு வேலை வாய்ப்பு இழப்பு, சம்பளம் குறைப்பு காணப்படுவதால், பொருளாதார ரீதியாக பின் தங்கிய 100 மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க முடிவு செய்துள்ளோம். வரும் காலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்பதால், மாணவர்கள் தேவையில்லாத கவலையையும், குழப்பத்தையும் விட்டுவிட்டு முடிந்தவரை துறை சார்ந்த தகுதிகளையும், திறன்களையும் வளர்த்துக்கொள்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். விரைவில், மீண்டும் வகுப்பறைகளில் கல்வி கற்கும் நிலை துவங்க உள்ள நிலையில், அவற்றிற்கு நாங்கள் முழுவீச்சில் தயாராகிவிருகிறோம். 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us