அறிவோம் ஜிப்மேட்! | Kalvimalar - News

அறிவோம் ஜிப்மேட்!ஜூன் 15,2021,21:40 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பான ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’, ஜிப்மேட் எனும் ’ஜாயின்ட் இன்டெக்ரேட்டர்டு புரொகிராம் இன் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட்’ தேர்வை நடத்துகிறது.


தேர்வின் முக்கியத்துவம்:

சிறந்த மேலாண்மை கல்வியை வழங்குவதற்காக இந்திய அரசால் நாட்டின் பல்வேறு நகரங்களில் துவக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஐ.ஐ.எம்., எனும் ’இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் மேனேஜ்மென்ட்’. போத் கயா மற்றும் ஜம்மு ஆகிய நகரங்களில் உள்ள ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் குறிப்பிட்ட சில மேலாண்மை கல்வியில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வே ஜிப்மேட். போத் கயா மற்றும் ஜம்மு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இத்தேர்வை என்.டி.ஏ., இத்தேர்வை நடத்துகிறது.


படிப்புகள்:

* போஸ்ட் கிராஜுவேட் புரொகிராம் - பி.ஜி.பி., / எம்.பி.ஏ.,

* பிஎச்.டி., புரொகிராம் இன் மேனேஜ்மெண்ட்

* இன்டெக்ரேட்டர்டு புரொகிராம் இன் மேனேஜ்மெண்ட் -ஐ.பி.எம்.,


தகுதிகள்:

12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளியினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.


தேர்வு முறை: 

குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட், டேட்டா இண்டர்பிரடேஷன் அண்ட் லாஜிக்கல் ரீசனிங் மற்றும் வெர்பல் எபிலிட்டி அண்ட் ரீடிங் காம்ப்ரிகென்ஷன் ஆகிய மூன்று பிரிவுகளில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் வீதம் குறைக்கப்படுகிறது. முற்றிலும், கம்ப்யூட்டர் அடிப்படையிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. 


தேர்வு நேரம்: 150 நிமிடங்கள்


தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, ஐதராபத், பெங்களூரு, ஹூப்ளி, மங்களூரு, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், குர்னூல், விஜயவாடா, விசாகப்பட்டினம் உட்பட 76 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.


விபரங்களுக்கு: https://nta.ac.in/ மற்றும் https://jipmat.nta.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us