டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி | Kalvimalar - News

டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜிஜூன் 05,2021,13:46 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ், புனேவில் செயல்படும் கல்வி நிறுவனம் ‘டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி’ 


1952ம் ஆண்டு ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ம்மெண்ட் டெக்னாலஜி’ (ஐ.ஏ.டி.,) என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், 2006ம் ஆண்டு தற்போதைய, ’டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி’ (டி.ஐ.ஏ.டி.,) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ராணுவ தொழில்நுட்பம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகளை கடந்த 40 ஆண்டுகளாக வழங்கி வருவதோடு மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இக்கல்வி நிறுவனம், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


படிப்புகள்: எம்.எஸ்சி., - புட் டெகனாலஜி மற்றும் பிஎச்.டி., படிப்புகள்


பிஎச்.டி., பிரிவுகள்:

* மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்

* கம்பியூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்

* எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

* ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்

* குவாண்டம் டெக்னாலஜி

* அப்ளைடு கெமிஸ்ட்ரி

* அப்ளைடு மேத்தமெடிக்ஸ்

* அப்ளைடு பிசிக்ஸ்


தகுதிகள்: 

எம்.எஸ்சி., படிப்பிற்கு, புட் சயின்ஸ், புட் டெக்னாலஜி, நியூட்ரிஷன், இன்ஜினியரிங், சயின்சஸ், அக்ரிகல்ச்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 


பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு தேசிய அளவிலான தகுதித்தேர்விலும் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களின் கல்வித் திறனிற்கு ஏற்ப உதவித்தொகைகளும் வழங்கப்படுகிறது. 


மாணவர் சேர்க்கை முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


விபரங்களுக்கு: https://diat.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us