அறிவோம் என்.ஐ.ஆர்.டி.பி.ஆர்., | Kalvimalar - News

அறிவோம் என்.ஐ.ஆர்.டி.பி.ஆர்.,ஜூன் 05,2021,13:44 IST

எழுத்தின் அளவு :

மத்திய கிராம மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் டெவலப்மெண்ட் அண்ட் பஞ்சாயத் ராஜ்’, கிராமப்புற வளர்ச்சிக்கான தனித்துவமிக்க தேசிய அமைப்பாகவும் செயல்படுகிறது.


முக்கியத்துவம்:

கிராமப்புற ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் கவனம் செலுத்துதல், ஜனநாயக பரவலாக்க செயல்முறைகளை சிறப்பாக செயல்படுத்த முயற்சித்தல், கிராமப்புற மேம்பாட்டு பணியாளர்களின் செயல்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல், சமூக ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப பூங்கா மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், தேசிய கொள்கை வகுத்தலிலும் மத்திய அமைச்சகத்துடன் இணைந்து செயலாற்றுகிறது. 


பள்ளிகள் மற்றும் மையங்கள்:

ஸ்கூல் ஆப் டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ் அண்ட் சோசியல் ஜஸ்டிஸ், ஸ்கூல் ஆப் லோக்கல் கவர்னன்ஸ், ஸ்கூல் ஆப் பப்ளிக் பாலிசி அண்ட் குட் கவர்னன்ஸ், ஸ்கூல் ஆப் ரூரல் லவ்லிஹுட்ஸ் அண்ட் இன்பிராஸ்டரச்சர், ஸ்கூல் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் நாலெட்ஜ், ஸ்கூல் ஆப் சஸ்டயினபில் டெவெலப்மெண்ட் மற்றும் ஸ்கூல் ஆப் அக்கவுண்டபிலிட்டி அண்ட் டிரேன்ஸ்பரன்சி ஆகிய 7 பள்ளிகளில் மொத்தம் 25 மையங்கள் கிராமப்புற வளர்ச்சியை பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இக்கல்வி நிறுவனம் அசாமில் மண்டல மையத்தையும் கொண்டுள்ளது. 


பிரதான படிப்புகள்:

* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் - ரூரல் டெவலப்மெண்ட் (பி.ஜி.டி.எம் - ஆர்.எம்) - 2 ஆண்டுகள்

* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் ரூரல் டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.ஆர்.டி.எம்) - 1 ஆண்டு


தகுதிகள்:

இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண்ணில் விலக்கு வழங்கப்படுகிறது. மேலும், கேட், எக்ஸாட், மேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ., ஆகிய தகுதித்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


சேர்க்கை முறை: தகுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும்.


உதவித்தொகை: கல்வியில் சிறந்த, தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.


விபரங்களுக்கு: www.nird.org.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us