மிஷின் லேர்னிங் எதிர்காலம் பிரகாசம் | Kalvimalar - News

மிஷின் லேர்னிங் எதிர்காலம் பிரகாசம்டிசம்பர் 22,2020,13:09 IST

எழுத்தின் அளவு :

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சிகளால் அனைத்து துறைகளுமே பெரும் மாறுதலை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கம்ப்யூட்டர் துறையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கணினி செயல்பாடுகளுக்கான உள்ளிட்டு மொழி என்கிற அடிப்படையில் ‘மிஷின் லேர்னிங்’ எனும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது!


முக்கியத்துவம்:

மனிதர்களுக்கு பதிலாக, இயந்திரங்களைக் கொண்டு ‘டேட்டா’வை புரிந்துகொள்ளச் செய்யும் இத்தொழில்நுட்பத்தை, மனிதர்களுக்கும், இயந்திரங்களுக்கும் இடையேயான தகவல் பரிமாற்ற மொழி என்றும் சொல்லலாம். ‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ தொழில்நுட்பங்களை மிஷின் லேர்னிங்கின் துணைகொண்டே விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் உருவாக்குகிறார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் உச்சம் எனக் கூறப்படும் ‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ துறையின் ஒரு உட்பிரிவே ‘மிஷின் லேர்னிங்’.


படிப்புகள்: 

இளநிலை, முதுநிலை, பி.எச்டி., டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள். புதிய தொழில்நுட்பம் என்பதால், மிகக் குறைவான படிப்புகளே அதுவும் மிகக் குறைந்த கல்விநிறுவனங்களால் மட்டுமே இப்படிப்பு வழங்கப்படுகிறது. 


முக்கிய பாடப்பிரிவுகள்:

நியூரல் நெட்வொர்க்ஸ், பங்ஷனல் அனாலிசிஸ், அல்கரிதம், ஆப்டிமைசேஷன், ஸ்டாட்ஸ், லேர்னிங் தியரி, டேட்டா ஸ்ட்ரக்ச்சர்.


தகுதி:

இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களைத் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பிற்கு துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு அவசியம்.


வேலை வாய்ப்புகள்:

இந்த துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆராய்ச்சி மையங்கள், அரசு தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் ஆராய்ச்சியாளராகவும், கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும் பணிபுரியலாம். இதைத் தவிர ‘சர்ச் இன்ஜின்’ நிறுவனங்கள், கேமிங் நிறுவனங்கள், ரோபாடிக் ஆராய்ச்சி நிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us