பெட்ரோலியம் இன்ஜினியரிங் படிக்கலாமா? | Kalvimalar - News

பெட்ரோலியம் இன்ஜினியரிங் படிக்கலாமா?நவம்பர் 11,2020,18:02 IST

எழுத்தின் அளவு :

பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள், மனித வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்டது என்றே கூறலாம்! 


பெட்ரோலியம் இன்ஜினியரிங் மாணவர்கள், ஜியோபிசிக்ஸ், பெட்ரோலியம் ஜியாலஜி, எக்னாமிக்ஸ், டிரில்லிங் இன்ஜினியரிங், பார்மேஷன் எவலியூஷன், ரிசர்வாயர் சிமுலேஷன், வெல் இன்ஜினியரிங், ஆர்டிபீசியல் லிப்ட் சிஸ்டம் மற்றும் ஆயில் அன்ட் கேஸ் பெசிலிடீஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் நுண்ணறிவு திறன் பெற்றிருப்பது மிக நல்லது.


படிப்புகள் மற்றும் தகுதிகள்: இளநிலை படிப்பில் பி.இ., /பி.டெக்., மற்றும் முதுநிலை படிப்பில் எம்.இ., /எம்.டெக்., பட்டம் வழங்கப்படுகிறது. இளநிலை படிப்புக்கு, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


முதுநிலை படிப்புக்கு, இளநிலை படிப்பில் கெமிக்கல் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் பெட்ரோலியம் இன்ஜினியரிங்கில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்: கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பின் இணை பிரிவு பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங். உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை சுத்திகரிக்கும் முறையை பற்றி படிப்பதாகும். 


பாடப்பிரிவுகள்: ரியாக்சன் இன்ஜினியரிங், ஹீட் டிரான்ஸ்பர், மாஸ் டிரான்ஸ்பர், ப்பூயிட் டைனமிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ், டிரான்ஸ்போர்ட் பினோமினா, பெட்ரோ கெமிக்கல் புராசஸ், ரீபைன் ஆப்ரேஷன், நியூமரிக்கல் கம்ப்பியூட்டேஷன் புராசஸ், மாடலிங் மற்றும் சிமுலேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. 


தகுதிகள்: பி.இ., இளநிலை படிப்புக்கு, பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து,தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.இ., படிப்புக்கு, இத்துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிக்க விரும்பும் மாணவர்கள் துறைசார்ந்த முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வேலைவாய்ப்புகள்

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பெட்ரோலியம் தயாரிப்பு மற்றும் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் தொழிலாளர், பயிற்சியாளர், பொறியாளர் என பல்வேறு பதவிகள் உள்ளன. மேலும், ஆய்வகத்தில் விஞ்ஞானியாகவும் பணியில் அமரலாம். படித்து முடித்தவுடன் ஆண்டிற்கு ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 8 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புகள் அதிகம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எண்ணெய் வளமிக்க வெளிநாடுகளில் இத்துறைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. படிக்கும்போதே, ‘கேட்’ தேர்வுக்கு தயாராவது வாய்ப்புகளை எளிதாக்கும்!


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us