தேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் கல்வி சிறப்பம்சங்கள் -1 | Kalvimalar - News

தேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் கல்வி சிறப்பம்சங்கள் -1செப்டம்பர் 11,2020,18:24 IST

எழுத்தின் அளவு :

நம் நாட்டில், கடைசியாக, 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில், 1992-ம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, 'புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்' என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.


அதன்படி, பல விவாதங்கள், மக்களின் கருத்துக் கேட்பு, நிபுணர்களுடன் ஆய்வு என, பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு, தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல சர்ச்சைகள், விமர்சனங்கள் கூறப்பட்டாலும், பெரும்பாலானோர், புதியக் கல்விக் கொள்கையை வரவேற்றுள்ளனர்.


தாய்மொழி வழி கற்றல், மற்ற மொழிகளை கற்றல், எளிமையான தேர்வு முறைகள், குழந்தைகள் கற்றல் திறனை மதிப்பீடு செய்தல், போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி முறையில் மாற்றங்கள் போன்றவை, இந்த கல்விக் கொள்கையின் முக்கிய செயல் திட்டங்களாகும்.


விளையாட்டுடன் கூடிய கல்வி, கலைகள், கைவினைகளில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, என, இந்தக் கல்விக் கொள்கையில், பலருடைய பாராட்டை பெற்றுள்ள அம்சங்கள் நிறைந்துள்ளன. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில், 'ஆன்லைன்' மூலமாகவே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப உதவிகளுடன் கற்பித்தலுக்கு, இந்தக் கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பல நுாறு பக்கங்கள் உள்ள கல்விக் கொள்கையை, சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில், எளிமைபடுத்தி வழங்கியுள்ளோம்.


நோக்கம்


1. உயர் தரமான கல்வியை அனைவருக்கும் அளிப்பதன் மூலம், சமமான மற்றும் உயிர்ப்புடன் கூடிய அறிவுசார் சமூகத்தை உருவாக்குதல்


2. அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் அரசியல் சாசனத்தின் மதிப்புகள் குறித்த ஆழ்ந்த மரியாதையை உருவாக்குதல். நாட்டுடன் பிணைந்திருப்பது, மாறிவரும் உலகில் தன் பங்கு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது


3. மனித உரிமைகள், நீடித்த நிலையான வளர்ச்சியுடன் கூடிய வாழ்க்கை, உலகின் நலன் ஆகியவற்றை தங்களுடைய பொறுப்புகளாக உணரும் வகையில், திறன்கள், பண்புகளை, விழுமியங்களை ஏற்படுத்துவது. இதன் மூலம், மிகச் சிறந்த, உண்மையான உலகக் குடிமகன்களாக மாணவர்களை மாற்றுதல்


வரைவு திட்டம்


என்.சி.பி.எப்.இ.சி.இ.,


முன் குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கும்.


ஆராய்ச்சி மற்றும் சிறந்த செயல்பாடுகள்


ஈ.சி.சி.இ., எனப்படும் இளம் குழந்தை கவனிப்பு மற்றும் கல்வி தொடர்பான சமீபத்திய ஆராய்ச்சிகள் மற்றும் தேசிய, சர்வதேச அளவிலான சிறந்த செயல்பாடுகள், என்.சி.பி.எப்.இ.சி.இ.,யில் நடைமுறைபடுத்தப்படும்.


பல்முனை செயல்திட்டம்


எழுத்துக்கள், மொழிகள், எண்கள், எண்ணுதல், நிறங்கள், வடிவங்கள், விளையாட்டுகள், புதிர்கள், சிந்தனையைத் துாண்டுதல், பிரச்னைக்கு தீர்வு காணுதல், ஓவியம், வர்ணம் தீட்டுதல் மற்றும் இதர கலைகள், கைவினைகள், நாடகம் மற்றும் பொம்மலாட்டம், இசை

உள்ளிட்டவை அடங்கியதாக இருக்கும்.


பள்ளி தயார்படுத்துதல் அலகு


ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, மூன்று மாத, விளையாட்டுடன் கூடிய, பள்ளி தயார்படுத்துதல் அலகை, என்.சி.இ.ஆர்.டி., உருவாக்கும்.


கம்ப்யூட்டர் சிந்தனை


பள்ளி கல்வியில், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் வேகத்தில் தீர்வு காணும் சிந்தனை ஊக்குவிக்கப்படும்.


கணிதத்தின் மூலம் தீர்வு


கணித சிந்தனை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஊக்குவிக்கப்படும். புதிர்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம், இது செய்யப்படும்.


குறியீட்டு முறை


கோடிங் எனப்படும் குறியீட்டு முறை உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும்.


சமகால படிப்புகள் அறிமுகம்நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், சமகால படிப்புகள் கற்றுத் தரப்படும். செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு, சுற்றுச்சூழல் கல்வி, இயற்கை வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்டவை சேர்க்கப்படும்.


பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பில் மாற்றம்


பள்ளிக் கல்விக்கான, புதிய கற்பித்தல் மற்றும் பாடத் திட்ட கட்டமைப்பு (5+3+3+4): 3 ஆண்டுகள், அங்கன்வாடி, முன் பள்ளி பருவம் மற்றும் !2 ஆண்டுகள் பள்ளியில்.


* உயர்நிலை பருவம் (4 ஆண்டுகள்):பல பிரிவு பாடங்கள், சிந்தனையைத் துாண்டும் பயிற்சி, மாணவர்களே பாடங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு


* நடுநிலைப் பள்ளி பருவம் (3 ஆண்டுகள்): அறிவியல், கணிதம், கலை, சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் பாடங்களில் பரிசோதனை முறையிலான கற்பித்தல்


* தயார்படுத்துதல் பருவம் (3 ஆண்டுகள்): விளையாட்டு, கண்டுபிடித்தல் மற்றும் நடவடிக்கைகளுடன் இணைந்த, கலந்துரையாடும் வகையிலான வகுப்பறை கற்பித்தல்


* அடித்தள பருவம் (5 ஆண்டுகள்): பல நிலை, விளையாட்டு மற்றும் நடவடிக்கை சார்ந்த கற்றல்.எதிர்பார்க்கப்படும் பலன்கள்


*அனைவருக்குமான அணுகுமுறை - இளம் பருவக் கல்வி முதல், உயர்நிலை வரை


* பாதியில் படிப்பை நிறுத்திய, 2 கோடி பேரை மீண்டும் சேர்ப்பது


* உயர்நிலை பள்ளி வரை, மாணவர்களை தக்க வைப்பது


* தரமான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்களை அறியும் அறிவை உருவாக்குதல்


* கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடுகளில், 21ம் நுாற்றாண்டின் திறன்களை புகுத்துதல்


* ஆதாரங்களை பகிர்ந்து கொள்ளுதல் - பள்ளி வளாகங்கள்


* கற்றலில், மொழி ஒரு தடையாக இருப்பதை நீக்குவது


* பொது மற்றும் தனியார் பள்ளி கல்விக்கு பொதுவான தரத்தை -நிர்ணயிப்பதுஉலகளாவிய அணுகுமுறை


3 - 6 வயது குழந்தைகள் - அங்கன்வாடிகள், முன்கல்வி பள்ளிகள், பால்வாடிகா மூலம், இலவச, பாதுகாப்பான, உயர் தரமுள்ள இளம் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்வி வழங்கப்படும்.


அடித்தள கல்வி பாடத்திட்டம்


3 - 8 வயது பிரிவு இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 3 - 6 வயது வரை, இளம் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்வியின் கீழ் இருப்பர். 6 - 8 வயது வரை, துவக்கப் பள்ளியில், 1, 2ம் வகுப்பில் இருப்பர்.


பன்முகத்தன்மை:


கட்டுப்பாடுகளற்ற, பல நிலை, விளையாட்டை அடிப்படையாக கொண்ட, நேரடி செயல் விளக்கம் மூலமாக, கேள்விகள் கேட்டு கற்கும் விதமாக இருக்கும்.


தயார்படுத்துதல் வகுப்புகள்


தன், 5வது வயதுக்கு முன், அதாவது, 1ம் வகுப்புக்கு முன்பாக, ஒவ்வொரு குழந்தையும், தயார்படுத்துதல் வகுப்புகள் அல்லது பால்வாடிகாவில் இருப்பர்.


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, பழங்குடியினர் விவகாரம் ஆகியவை இணைந்து செயல்படும்.


பல்வகை வழிகள்


வழக்கமான மற்றும் முறைசாரா கல்வி முறைகளின் மூலம் கற்பதற்கான பல்வகை வழிகளை உருவாக்குதல்.


பள்ளிகள் கட்டமைப்பு 


அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் பள்ளிகள் கட்டப்படுவது ஊக்குவிக்கப்படும்.


கற்றலின் வெளிப்பாடு 


அனைத்து நிலைகளிலும், நிர்ணயிக்கப்பட்ட கற்றல் வெளிப்பாடுகளை உறுதி செய்தல்.


படிப்பை நிறுத்தியோர் 


பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியோரை, மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை.


மாற்று மையங்கள்: மாற்று மற்றும் புதுமையான கல்வி மையங்கள்.


நிகரற்ற பயிற்சி: அனைத்து வகை தொழில்கள் மற்றும் தனிப்பட்ட திறனை வளர்க்கத் தேவையான பயிற்சி.முக்கிய குறிக்கோள்கள்


அரசுகள் மீது மரியாதை அனைத்து பாடத்திட்டங்கள், ஆசிரியரியல் மற்றும் கொள்கைகளில் இடம்பெறும்.


சமமாக நடத்துதல் மற்றும் இணைத்து செயல்படுவது அனைத்து கல்வி முடிவுகளிலும் முக்கியமாக இடம்பெறும்.சமூகத்தின் பங்களிப்பு


நன்கொடையாளர்கள், தனியார் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.


தொழில்நுட்பத்தின் பயன்பாடு


கற்பித்தல் மற்றும் கற்பதிலும், மொழித் தடையை நீக்குவதிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும் பயன்படுத்தப்படும். மேலும், கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திலும் பயன்படுத்தப்படும்.


கருத்துருவை புரிந்து கொள்வது


வெறும் மனப்பாடம் செய்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் தேர்வுக்காக படிப்பதற்கு மாற்றாக, இவை வலியுறுத்தப்படும்.


தனித் திறன்கள்


ஒவ்வொரு மாணவரின் தனித் திறன்களையும் கண்டறிந்து, ஊக்குவிக்கப்படும்.


சிந்தித்தல் மற்றும் புதிய சிந்தனை


சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுத்தல், புதுமையாக, வித்தியாசமாக சிந்தித்தல் ஊக்குவிக்கப்படும்.


தொடர் மதிப்பீடுகள்


கல்வி நிபுணர்களின் நீடித்த ஆராய்ச்சி மற்றும் தொடர் கணிப்பீடுகளின்படி செய்யப்படும்.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us