முழுநேரமாக சி.ஏ., படிக்கலாம்! | Kalvimalar - News

முழுநேரமாக சி.ஏ., படிக்கலாம்!ஆகஸ்ட் 09,2020,18:17 IST

எழுத்தின் அளவு :

இன்று பெரும்பாலான மாணவர்களின் விருப்பமான படிப்பு பி.காம்., இப்பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, சி.ஏ., எனப்படும் 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்’ தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பலர். 


அதிக மாணவர்கள் சி.ஏ., தேர்வில் சாதிக்க நினைத்தாலும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் குறைவு தான்.  சி.ஏ., தேர்வுக்கு முழு நேரமாக தயாராக வேண்டியதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இதனை கருத்தில் கொண்டு தான், கோவையில் முதல் முறையாக முழு நேரம், சி.ஏ., படிப்புக்கு மாணவர்கள் தயராகும் வகையில், காலேஜ் ஆப் காமர்ஸ் துவக்கப்பட்டு உள்ளது. சி.ஏ., படிப்பை அகாடமி போன்ற இடங்களில் சென்று படிக்கும்போது, 150 மணி நேர வகுப்பை தான் கவனிக்கின்றனர். ஆனால் இங்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் 600 மணி நேரம், சி.ஏ., தேர்வுக்கு முழு பயிற்சி அளிக்கப்படுகிறது.


ஒரு கல்லுாரி சூழல் நிலவும் வகையில், ஹாஸ்டல் வசதியுடன், என்.எஸ்.இ., உட்பட பல்வேறு நிர்வாகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சி.ஏ., படிப்பவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமில்லாமல், 120க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறப்பான வரவேற்பு உள்ளது. இதுகுறித்து, சரியாக மாணவர்களுக்கு வழிகாட்டினால், அவர்களின் வாழ்க்கை பிரகாசமாகும் என்பதும், சி.ஏ., முழு நேர படிப்பு வழங்க முடிவு செய்துதற்கு ஒரு முக்கிய காரணம். 


பிளஸ் 2 மாணவர்களே!


இரண்டு ஆண்டுகள் சி.ஏ., தேர்வுக்கு முழுநேர பயிற்சி பெறும் மாணவர்கள், பவுண்டேசன் மற்றும் இன்டர்மீடியட் நிலைகளை வெற்றிகரமாக முடித்து அடுத்தகட்டத்துக்கு செல்வதை உறுதிப்படுத்துகிறோம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சி.ஏ., தேர்வுக்கு முழு நேரமாக பயிற்சி செய்வதோடு பி.காம்., போன்ற பட்டப்படிப்பை பகுதி நேரமாகவோ, தொலை நிலைக்கல்வி வாயிலாகவோ படித்து கொள்ளலாம். 


உலகமயமாக்கல் காரணமாக சி.ஏ., படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதி முதற்கொண்டு பல இடங்களிலும் சி.ஏ., படித்தவர்களுக்கு அதிகபட்ச தேவைகள் உள்ளன. இந்த படிப்பை கணிதம் அல்லது வணிக கணிதத்துடன் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு செய்யலாம். மற்ற பாடப்பிரிவுகளை போன்று சி.ஏ.,வையும் முழு நேரமாக படிப்பதன் மூலம், அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். விரைவாக நல்ல சம்பளத்தில் வேலைக்கும் சேரலாம். 


-சித்ரா, இயக்குநர், காலேஜ் ஆப் காமர்ஸ், கோவை 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us