வகுப்பறை கல்விக்கு நிகரில்லை! | Kalvimalar - News

வகுப்பறை கல்விக்கு நிகரில்லை!ஆகஸ்ட் 03,2020,18:13 IST

எழுத்தின் அளவு :

தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற எங்களது கல்வி நிறுவனத்தில், எலக்ட்ரானிக்ஸ், அக்ரிகல்ச்சர், மெக்கானிக், கம்ப்யூட்டர், பயோமெடிக்கல், பயோடெக் என எந்த துறையை மாணவர்கள் எடுத்து படித்தாலும், அதில் நவீன தொழில்நுட்பங்களை கற்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 


மிஷின் லேர்னிங், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படுகிறது. மேலும், ஈஸ்டர்ன் மிச்சிகன் யுனிவர்சிட்டி, நேஷனல் சைபர் டிபன்ஸ் ரிசர்ச் சென்டர், உட்பட பல்வேறு சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், ஊரடங்கு காலக்கட்டத்திலும் ஆன்லைன் வாயிலாக எங்கள் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் மதிப்புமிக்க கல்வி வழங்கப்படுகிறது.


ஆன்லைன் வழிக்கல்வி மாற்றாகது


ஆன்லைன் வாயிலாக என்னதான் சிறப்பான கல்வியை வழங்கினாலும், ஒரு மாணவர் பட்டதாரிகளாக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவர்களாகவும் உருவாக வகுப்பறை வழி கல்வியே சிறந்ததாக இருக்கும். வகுப்பறையிலான கல்வி முறை வாயிலாகவே பேராசிரியர்களுடனும், இதர மாணவர்களுடனும் நேரடி கலந்துரையாடல், குழுவாக செயல்படுதல், விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவை சாத்தியமாகிறது. பேராசிரியர்களும், ஒவ்வொரு மாணவரது தனிப்பட்ட விருப்பம், கற்கும் திறன் ஆகியவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியும். 


தற்போதைய அவசர காலத்தில், ஆன்லைன் வழிக் கல்வி தற்சமயத்திற்கு ஒரு மாற்றாக இருக்கலாமே தவிர, அனைத்தையும் ஆன்லைனில் கற்பது என்பது சாத்தியமில்லை. அது ஒரு நிரந்தர தீர்வும் அலல். எனவே, வகுப்பறை கல்விக்கு, ஆன்லைன் கல்வி முறை என்றுமே மாற்றாகாது என்பது எனது அசைக்க முடியாது கருத்து. 


நவீன ஆய்வகங்கள்


பி.எம்.டபிள்யு, ஹுண்டாய், நேஷனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் போன்ற தொழில்நிறுவனங்களின் ஆய்வகங்கள் எங்களது கல்வி நிறுவனத்திலேயே இருப்பதால், மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு எளிதாகிறது. மேலும், 180 தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவன வளாகத்திலேயே செயல்படும் டாக்டர் வித்யா இன்குபேஷன் சென்டர் வாயிலாக, மாணவர்களது சிறந்த ஐடியாக்கள் ஒரு புராஜெக்ட் ஆகவும், புராடெக்ட் ஆகவும் உருவாக ஊக்கமளிக்கிறோம். தொழில்முனைவோராகவும் மாணவர்களை உருவாக்க பிரத்யேக மையம் செயல்படுகிறது.


-இந்து முருகேசன், துணை தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us