திறன் மேம்பாட்டிற்கு உதவும் இ–பாக்ஸ் | Kalvimalar - News

திறன் மேம்பாட்டிற்கு உதவும் இ–பாக்ஸ்ஜூலை 31,2020,16:19 IST

எழுத்தின் அளவு :

செயல்முறை கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நோக்கிலும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனை மாணவர்களிடம் மேம்படுத்தும் வகையிலும் கற்றல், கற்பித்தல் முறை இருக்க ‘இ–பாக்ஸ்’ எனும் திட்டத்தை ‘ஏம்பிசாப்ட் டெக்னாலஜீஸ்’ அறிமுகப்படுத்தியுள்ளது.


பள்ளி, கல்லூரி, கார்ப்ரேட் மற்றும் டிஜிட்டல் ஆகிய நான்கு முறைகளில் அனைத்து தரப்பினருக்கும், இ-பாக்ஸ் பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. நாடு முழுவதும், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி, பல்கலைகள் இத்திட்டத்தை பயன்படுத்தும் நிலையில், தேசிய தொழில்நுட்ப கல்வி தொடர்பில் 40 வகையான பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. 


ஊரடங்கு நேரத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், இ–பாக்ஸ் திட்டத்தை இலவசமாக வழங்க அறிவுறுத்தின. அதையடுத்து இ–பாக்ஸ் திட்டத்தை ஏம்பிசாப்ட் நிறுவனம், 15 நாட்களுக்கும் மேலாக இலவசமாக வழங்கியது. இதில், நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மாணவர்கள் இணைந்து பயனடைந்தனர்.


’நீட்’ பயிற்சி


இதன்தொடர்ச்சியாக தமிழக கல்வித்துறை, ஏம்பிசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இ–பாக்ஸ் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்களுக்கு இரண்டு வார காலம் இலவச பயிற்சி அளித்தது. இப்பயிற்சியில், மாநிலம் முழுவதில் இருந்தும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயனடைந்தனர்.  தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘இ–பாக்ஸ்’ மூலம் 'நீட்’ பயிற்சி அளிக்கப்படுகிறது. 


இதன்படி, 40 நாட்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் ஆசிரியர்கள் கற்பிக்கும் நான்கு மணி நேர பயிற்சி வகுப்புகளும், தொடர்ந்து, நான்கு மணி நேர செய்முறை பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஆசிரியர்கள், துறை வல்லுனர்கள், 'நீட்’ தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். 


முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல் பிரிவுகளை சார்ந்த 40 ஆசிரியர்கள் இந்த பயிற்சி அளிக்கின்றனர்.  மேலும், அன்றைய தினம் ஆசிரியர்கள் எடுத்த வகுப்பு பதிவாகி, இ–பாக்ஸ் ‘போர்ட்டலில்’ இருக்கும். மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அதனை எப்போது வேண்டும் என்றாலும் பார்த்து தெளிப்படுத்தி கொள்ளலாம்.  


மேலும், தினமும் மாணவர்களது கற்றல் திறன் பரிசோதிகப்பட்டு, அதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்கள் 'நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது அதிகரிக்கும் என்று மனதார நம்புகிறோம்.


-புனிதா, நிர்வாக இயக்குநர், ஏம்பிசாப்ட் டெக்னாலஜீஸ் 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us