ஆட்சிப்பணித் தேர்வுகளில் வெற்றி எளிது: சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். | Kalvimalar - News

ஆட்சிப்பணித் தேர்வுகளில் வெற்றி எளிது: சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.மே 13,2014,13:56 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி என பல்வேறு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் தினமலர். பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்த "உங்களால் முடியும்" என்ற இணையதள வழி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.

படிப்புகள் குறித்த சந்தேகங்கள், குழப்பங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு துறை சார்ந்த வல்லுநர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கிறார்கள். முதல் நிகழ்ச்சியாக இந்திய ஆட்சிப்பணிகள் குறித்த சந்தேகங்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திர பாபு பதிலளித்தார்.

ஆட்சிப்பணிகள் குறித்து கூறுகையில்,

* ஆட்சிப்பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., வருமான வரித்துறை, ரயில்வே துறை, கலால் வரித்துறை என 22 வகையான பிரிவுகள் உள்ளது.

* ஆட்சிப் பணிகளை சம்பளத்தால் எடை போடாதீர்கள். ஏனெனில் சேவைதான் முக்கியம். வருமானத்தை எதிர்பார்த்து பணிக்கு வருவது தவறானது. மக்களின் தேவைகளை நேர்மையான் முறையில் தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி எதிலும் இருக்காது. சேவையின் தாக்கமும், முக்கியத்துவமுமே ஆட்சிப் பணிகளின் அடிப்படை.

* ஆட்சிப் பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் கோவை, சென்னை, டில்லி என பல இடங்களிலும் இருந்தாலும் சென்னையில் உள்ள பயிற்சி மையங்களில் தான் தேர்ச்சி விழுக்காடு அதிகம் உள்ளது.

* மொழி அறிவு அவசியம். தாய்மொழியறிவோடு, ஆங்கில மொழி அறிவும் அவசியம் வேண்டும். இரண்டு மொழிகளிலும் எழுதுவது, பேசுவது என இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* விவசாயப்படிப்புகள், பொறியியல் படித்தவர்கள் அதிகமான அளவில் ஆட்சிப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

* விவேகானந்தர் கல்வி குறித்து கூறும்பொழுது, "கல்வியை உணர்ந்து படிக்க வேண்டும், அதுதான் உண்மையாக கல்வி" என்கிறார். எதனை படித்தாலும் மேம்போக்காக படிக்காமல் ஆழ்ந்து படிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

* ஆட்சிப் பணிகளுக்கு சிறு வயதில் இருந்தே தயாராவது நல்லது. படிக்கும் பாட புத்தகங்களை ஒதுக்கிவிடாமல், பத்திரமாக வைத்து படித்தாலே தயாராவது எளிதாக இருக்கும்.

* பலரும் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தலைமைப் பண்பு அவசியம் என நினைக்கின்றனர். அது தவறு. தலைமைப் பண்பு அனைவருக்கும் அவசியம். தலைமைப் பண்பு இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. தலைமைப் பண்பினை பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.

* நாம் எவரையும் நமக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் நாம் முன்னுதாரணமாக எடுக்கும் நபரிடம் நம்மிடம் இருக்கும் திறமைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமக்கு ஊக்கம் அளிப்பவர்கள் இருக்கலாம். அவர் பெரிய மனிதராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் எனது பணிக்காலத்தில் காவலர், முதன்மைக் காவலர், துணை ஆய்வாளர், ஆய்வாளர் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் உத்வேகத்தைப் பெற்றிருக்கிறேன்.

* தனித்திறனாளிகளுக்கு ஆட்சிப்பணித் தேர்வில் சிறப்பு சலுகைகள் இருக்கிறது. ஐ.பி.எஸ். பணிக்கு வரமுடியாவிட்டாலும், அவர்கள் ஐ.ஏ.எஸ். பணிகளுக்கு முயற்சி செய்யலாம். 


வாசகர் கருத்து

Thank you sir........
by பிரேம்,India    13-மே-2014 10:38:38 IST
நல்லதை நாடு வரவேற்கும் நானும் வரவேற்கிறேன்
by செல்வமங்கை ,Singapore    13-மே-2014 07:27:10 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us