அறிவோம் என்.ஐ.இ.பி.எம்.டி., | Kalvimalar - News

அறிவோம் என்.ஐ.இ.பி.எம்.டி.,மார்ச் 19,2020,10:54 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் சோசியல் ஜஸ்டிஸ் அண்டு எம்பவர்மெண்ட் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் ’நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் எம்பவர்மெண்ட் ஆப் பர்சன்ஸ் வித் மல்டிபிள் டிசெபிலிட்டிஸ்’, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனமாக செயல்படுகிறது.


முக்கியத்துவம்

ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களை மேம்படுத்துவதற்கான தேசிய வள மையமாக 2005ம் ஆண்டு முதல் செயல்படும் இந்நிறுவனம், கண் பார்வை இல்லாமை, பார்வை குறைவு, தொழுநோய் குணப்படுத்தப்பட்ட நபர்கள், செவித்திறன் குறைபாடு (காது கேளாமை மற்றும் கேட்கும் திறன் குறைவு), லோகோமோட்டர் இயலாமை, குள்ளவாதம், அறிவுசார் இயலாமை, மன நோய், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, நாள்பட்ட நரம்பியல் நிலைமைகள், குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் ஸ்க்லரோசிஸ், பேச்சு மற்றும் மொழி இயலாமை, தலசீமியா, ஹீமோபிலியா, சிக்கிள் செல் நோய், காது கேளாதோர், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர், பார்கின்சன் நோய் மற்றும் தேசிய அறக்கட்டளை (1999) சட்டத்தின்படி, பல குறைபாடுகள், ஆட்டிசம், பெருமூளை வாதம், மனநல குறைபாடு உள்ளவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் மறுவாழ்வு பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் செயல்படுகிறது.


இதர சேவைகள்:

மறுவாழ்வு மருத்துவம், உடல் சிகிச்சை, உணர்ச்சி ஒருங்கிணைப்பு, ஆரம்ப தலையீட்டு சேவைகள், புரோஸ்டெடிக்ஸ் & ஆர்தோடிக்ஸ், சிறப்பு கல்வி,  உளவியல் மதிப்பீடுகள் மற்றும் தலையீடுகள், பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்பு, தொழில் பயிற்சி, தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை, சமூக அடிப்படையிலான மறுவாழ்வு, சிறப்பு சிகிச்சைகள் (மனநல, நரம்பியல் மற்றும் கண் மருத்துவம்)


வழங்கப்படும் படிப்புகள்:

சி.சி.சி.ஜி., டிப்ளமா இன் ஸ்பெஷல் எஜுகேஷன் (பெருமூளை வாதம், காதுகேளாமை, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, பலவித குறைபாடுகள்), பி.பி.டி., பி.ஓ.டி., பி.பி.ஓ., பி.ஏ.எஸ்.எல்.பி., பி.எட்.,-ஸ்பெஷல் எஜுகேஷன் (காதுகேளாமை, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, பலவித குறைபாடுகள்), எம்.எட்.,-ஸ்பெஷல் எஜுகேஷன் (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, பலவித குறைபாடுகள்), பி.ஜி.டி.டி.டி., பி.ஜி.டி.இ.ஐ., மற்றும் எம்.பில்.,-கிளினிக்கல் சைக்காலஜி.


விபரங்களுக்கு: http://niepmd.tn.nic.in/courses.php


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us