அறிவோம் என்.ஐ.டி.டி.டி.ஆர்.சி., | Kalvimalar - News

அறிவோம் என்.ஐ.டி.டி.டி.ஆர்.சி.,மார்ச் 11,2020,09:16 IST

எழுத்தின் அளவு :

தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 1960ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப்  டெக்னிக்கல் டீச்சர்ஸ் டிரைனிங் அண்டு ரிசர்ச், நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறது.


முக்கிய செயல்பாடுகள்:

ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு, குறுகியகால பயிற்சிகள், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நிறுவனங்களுக்கான சேவை மற்றும் ஆலோசனை ஆகிய பல்வேறு பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 


பிரதான மையங்கள்: சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் போபால். 


நீட்டிப்பு மையங்கள்: பெங்களூரு, ஐதராபாத், கலமசேரி, விஜயவாடா, குவகாத்தி, புவனேஸ்வர், புனே, பனாஜி, அகமதாபாத் மற்றும் ராய்ப்பூர்.


வழங்கப்படும் படிப்புகள்: 

இந்நிறுவனம் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியுடனும், பல்கலைக்கழக அங்கீகாரத்துடனும் பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறது.


முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.இ., - இன்பிராஸ்டரக்சர் இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மெண்ட்

எம்.இ., - ஸ்டரக்சர் இன்ஜினியரிங் 

எம்.இ., - அட்வான்ஸ்டு புரொடக்‌ஷன் சிஸ்டம்ஸ்

எம்.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (இன்டர்நெட் ஆப் திங்ஸ்)

எம்.இ., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்)

எம்.இ., - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (ரோபாட்டிக்ஸ்)

எம்.இ., - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (மானுபாக்சரிங் டெக்னாலஜி)

எம்.இ., - சிவில் இன்ஜினியரிங் (கன்ஸ்டரக்‌ஷன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட்)

எம்.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் 

எம்.இ., - எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கன்ட்ரோல்)

எம்.இ., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 

எம்.டெக்., - கம்ப்யூட்டர் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட்

எம்.டெக்., - கன்ஸ்ட்ரக்‌ஷன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட்


ஆராய்ச்சி படிப்புகள்:

இன்ஜினியரிங் எஜுகேஷன், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உட்பட பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.


குறுகியகால படிப்புகள்: 

ஆசிரியர்கள், தொழில் நிறுவன பணியாளர்கள், பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தேவையைப் பொறுத்து அவ்வப்போது பல்வேறு பிரிவுகளில் குறுகிய கால படிப்புகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்., வழங்குகிறது.


விபரங்களுக்கு: https://www.nitttrc.ac.in/ , http://www.nitttrchd.ac.in/ , http://www.nitttrkol.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us