உலகின் மிகப்பெரிய மாணவர் ஆராய்ச்சி உதவி திட்டங்களில் ஒன்றான, புல்பிரைட் உதவித்தொகை திட்டம் பிப்ரவரி 1950ல், அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் யு.எஸ். தூதர் லோய் டபிள்யூ. ஹென்டர்சன் ஆகியோரால் கையெழுத்திட்டப்பட்டது. இந்த 70 ஆண்டு காலத்தில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சுமார் 20 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்!
முக்கியத்துவம்
இந்த திட்டத்தை நிர்வகித்து வந்த அமெரிக்க கல்வி அறிக்கட்டளை, 2008ம் ஆண்டில் அமெரிக்க-இந்தியா கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) என பெயர் பெற்றது. புதிய ஒப்பந்தத்தின் படி, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கு பெறும் இத்திட்டங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் பங்குபெறும் திட்டமாகவும் புல்பிரைட் உதவித்தொகை திட்டம் விளங்குகிறது. 70 ஆண்டுகால திட்டத்தை கொண்டாடும் இத்தருணத்தில், பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?:
புல்பிரைட் திட்டத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் புரொபஷனல்கள் பங்கேற்கலாம்.
துறைகள்:
கலை, மானுடவியல், சமூக அறிவியல் மற்றும் 'ஸ்டெம்’ எனப்படும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறையை சார்ந்தவர்கள் விண்ணப்பக்கலாம்.
பயன்கள்:
இந்தியா மற்றும் அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்தவர்கள் பயன்பெறும் இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் இந்தியர்களுக்கு, குறிப்பிட்ட காலம் அமெரிக்கா சென்று அங்கு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு உட்பட அனைத்து செலவுகளுக்குமான நிதி புல்பிரைட் திட்டத்தால் வழங்கப்படுகிறது.
செயல்படும் இடங்கள்:
இத்திட்டத்தை நிர்வகிக்கும் யு.எஸ்.ஐ.இ.எப்., இந்தியாவில், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகிறது.
2021-22ம் ஆண்டிற்கான உதவித்தொகை திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திறமையையும் மேம்படுத்திக்கொள்ளும் விதமாகவும், இரு நாட்டு உறவுகளுக்கும் பாலமாக விளங்கும் வகையிலும், இந்த மிகச் சிறந்த வாய்ப்பை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, www.usief.org.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
-ஆடம் க்ரோட்ஸ்கி, நிர்வாக இயக்குநர், அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளை.