நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி | Kalvimalar - News

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜிபிப்ரவரி 11,2020,13:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச் மற்றும் அமெரிக்காவின் ராக்கெபெல்லர் பவுண்டேஷன் இணைந்து கணுக்காலி வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்காக, 1952 ஆண்டில் புனேவில் நிறுவிய வைரஸ் ரிசர்ச் சென்டர் (வி.ஆர்.சி.,) விரிவுபடுத்தப்பட்டு, 1978ம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியாக உருவகமடைந்தது. 


உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஆர்போவைரஸ் உட்பட பல்வேறு வைரல் நோய்களுக்கான பரிசோதனை, ஆராய்ச்சி செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனம், செல் ரெபாசிட்ரி, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி, ஹெபடிடிஸ், இன்புளூன்சா, வைரஸ் ரெஜிஸ்ட்ரி, பயோஸ்டேடிஸ்டிக்ஸ் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.


பிரதான நோக்கங்கள்:

* மனிதர்களை பாதிக்கும் வைரல் நோய்கள் குறித்து ஆராய்தல்

* வெடிப்புகள் மற்றும் வைரஸ்களின் தன்மை பற்றி பரிசோதனை மேற்கொள்ளுதல்.

* இயற்கை சுழற்சி, பராமரிப்பு மற்றும் வைரஸ்களின் பரவல் பற்றிய ஆராய்தல்.

* வைரஸ் தொற்றுநோய்களைக் கணிப்பதற்கான மாதிரிகள் உருவாக்குதல், பல்வேறு வைரஸ்களின் மரபணு மற்றும் நோயெதிர்ப்பு பண்புகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.

* வைரஸ் நோய்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல். தற்போது, கோரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 011-23978046, 1800-180-1104 ஆகிய தொலைபேசி எண்களில் உரிய விளக்கங்களை 24 மணிநேரமும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


வழங்கும் படிப்புகள்:


சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன், ஐ.சி.எம்.ஆர்.-என்.ஐ.வி., பின்வரும் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது.


எம்.எஸ்சி., - வைராலஜி

எம்.பில்., - பேசிக் மெடிக்கல் சயின்ஸ் 

எம்.பில்., - பயோடெக்னாலஜி 

பிஎச்.டி., - பேசிக் மெடிக்கல் சயின்ஸ் 

பிஎச்.டி., - பயோடெக்னாலஜி 

பிஎச்.டி., - பயோகெமிஸ்ட்ரி

பிஎச்.டி., - மைக்ரோபயோலஜி

பிஎச்.டி., - ஜுவாலஜி


பயிற்சிகள் மற்றும் பயிலரங்குகள்: மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல்வேறு வைரஸ் சார்ந்த பயிற்சிகளையும், பயிலரங்குகளையும் அவ்வப்போது வழங்குகிறது.


விபரங்களுக்கு: http://niv.co.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us