அறிவோம் ஐ.ஐ.பி.இ., | Kalvimalar - News

அறிவோம் ஐ.ஐ.பி.இ., பிப்ரவரி 08,2020,02:57 IST

எழுத்தின் அளவு :

பெட்ரோலியம் துறையில் தேவையான திறன் மிகுந்த மனிதவளத்தை பெருக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இத்துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்டு எனர்ஜி’!


அறிமுகம்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்டு எனர்ஜி சட்டம் -2017 எனும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கு இணையான தகுதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நிறுவனம், ஐ.ஐ.டி.,-காரக்பூர், ஐ.ஐ.டி.,-கவுகாத்தி, ஐ.ஐ.டி.,-சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.


வழங்கப்படும் படிப்புகள்

* பி.டெக்.,- பெட்ரோலியம் இன்ஜினியரிங் 

* பி.டெக்., - கெமிக்கல் இன்ஜினியரிங் 


படிப்பு காலம்: 4 ஆண்டுகள்


சேர்க்கை இடங்கள்: ஒவ்வொரு படிப்பிலும் தலா 50 இடங்கள்


மாணவர் சேர்க்கை முறை:

தேசிய அளவில் நடைபெறும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் -ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஐ.ஐ.டி.,கள் கடைபிடிக்கும் இட ஒதுக்கீட்டு முறை இக்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.


உதவித்தொகை: இன்ஸ்பயர் உதவித்தொகை திட்டத்தின்கீழ், தகுதியான மாணவர்கள் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறலாம்.


உதயமாகும் புதிய துறைகள்:

எர்த் சயின்சஸ், பெட்ரோலியம் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை உருவாக்கவும், அவற்றின் கீழ், பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


விபரங்களுக்கு: http://iipe.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us