சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட் | Kalvimalar - News

சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட்பிப்ரவரி 07,2020,21:07 IST

எழுத்தின் அளவு :

கணித அறிவியல் துறை சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்துள்ள சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட் 1989ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஸ்பிக் அறிவியல் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இக்கல்வி நிறுவனம் 1996ம் ஆண்டில் தன்னாட்சி நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. சென்னை சிறுசேரியில் செயல்படும் இக்கல்வி நிறுவனத்திற்கு, 2006ல் இந்திய அரசால் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. 


வழங்கப்படும் படிப்புகள்


இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல்  - 3 ஆண்டு படிப்பு

பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 3 ஆண்டு படிப்பு


தகுதி:  12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி


முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.எஸ்சி., - கணிதம்

தகுதி: பி.ஏ., பிஎஸ்.சி., பி.இ., பி.டெக்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் கணிதப்பாடத்தை படித்திருக்க வேண்டும்.


எம்.எஸ்சி., - கணினி அறிவியல்

தகுதி: பி.ஏ., பிஎஸ்.சி., பி.இ., பி.டெக்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் கணினி அறிவியல் பாடத்தை படித்திருக்க வேண்டும்.


எம்.எஸ்சி., - தகவல் அறிவியல்

தகுதி: பி.ஏ., பிஎஸ்.சி., பி.இ., பி.டெக்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் கணிதம் அல்லது புள்ளியல் அல்லது கணினி அறிவியல் பாடத்தை படித்திருக்க வேண்டும்.


ஆராய்ச்சி படிப்புகள்:

பிஎச்.டி., - கணிதம்

தகுதி: பிஎஸ்.சி., -கணிதம், எம்.எஸ்சி., -கணிதம், பி.இ., பி.டெக்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.


பிஎச்.டி., - கணினி அறிவியல்

தகுதி: எம்.எஸ்சி., -கணினி அறிவியல், எம்.சி.ஏ., பி.இ., பி.டெக்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.


பிஎச்.டி., - இயற்பியல் 

தகுதி: எம்எஸ்.சி., -இயற்பியல் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.


உதவித்தொகை: டி.ஏ.இ., என்.பி.எச்.எம்., டி.எஸ்.டி., உட்பட நாட்டின் பல்வேறு அரசு சார்ந்த அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி பெறும் இக்கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகைகளை வழங்குகிறது. அதன்படி, இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயும், பிஎச்.டி., மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாயும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 28 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு புத்தக செலவீனம், வீட்டு வாடகை ஆகியவற்றிற்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. 


மாணவர் சேர்க்கை முறை: 

பிஎச்.டி.,-இயற்பியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ’ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கீரினிங் டெஸ்ட் - ஜெஸ்ட்’ தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது. பிற அனைத்து படிப்புகளுக்கும் பிரத்யேக நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 


விபரங்களுக்கு: www.cmi.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us