அறிவோம் ஐ.ஐ.எப்.பி.டி., | Kalvimalar - News

அறிவோம் ஐ.ஐ.எப்.பி.டி., ஜனவரி 21,2020,15:05 IST

எழுத்தின் அளவு :

மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழ், தஞ்சாவூரில் செயல்படும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் புட் புராசசிங் டெக்னாலஜி’, இத்துறையில் நாட்டின் முன்னாடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் முன்னோடியாக திகழ்கிறது.

முக்கியத்துவம்
விஞ்ஞானி டாக்டர் வி.சுப்ரமணியன் மேற்பார்வையில் பல நிலைகளை கடந்து 1972ல் பேடி புராசசிங் ரிசர்ச் சென்டர் (பி.பி.ஆர்.சி.,) ஆகவும், தேசிய ஆய்வுக்கூடமாகவும் விளங்கிய நிலையில், 2008ம் ஆண்டு மத்திய அமைச்சகத்தின் கீழ், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிராப் புராசசிங் டெக்னாலஜி (ஐ.ஐ.சி.பி.டி.,) ஆக பெயர் மாற்றப்பட்டது. பயிர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் இந்நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டு, 2017ம் ஆண்டில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் புட் புராசசிங் டெக்னாலஜி என பெயர் சூட்டப்பட்டது. 

நவீன மயமாக்கப்பட்ட இந்நிறுவனம் மத்திய அரசின் உணவு சார்ந்த பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதுடன், துறை சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் தொழில் முனைவோர்களுக்கும், துறை சார்ந்தவர்களுக்கும் தொடர் பயிற்சியை அளித்துவருகிறது. மேலும், நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்துறையில் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில், பல்வேறு பட்ட மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் வழங்கி வருகிறது. பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து, நவீன ஆய்வகங்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.


வழங்கப்படும் படிப்புகள்:
* பி.டெக்., - புட் டெக்னாலஜி (75 இடங்கள்)
* எம்.டெக்., - புட் புராசசிங் இன்ஜினியரிங் (12 இடங்கள்)
* எம்.டெக்., - புட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (12 இடங்கள்)
* எம்.டெக்.,- புட் சேப்டி அண்டு குவாலிட்டி அசூரன்ஸ் (12 இடங்கள்)
* பிஎச்.டி., - புட் புராசசஸ் இன்ஜினியரிங் (8 இடங்கள்)
* பிஎச்.டி., - புட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (8 இடங்கள்)

துறைகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள்:
புட் இன் ஜினியரிங், புட் பேக்கேஜிங் அண்ட் சிஸ்டம் டெவலப்மெண்ட், புட் புராடக்ட் டெவெலப்மெண்ட், புட் சேப்டி அண்டு குவாலிட்டி டெஸ்டிங்
புட் பயோடெக்னாலஜி, பிரைமரி புராசசிங், ஸ்டோரேஜ் அண்டு ஹேன்டிலிங், கம்ப்யூடேஷனல் மாடலிங் அண்டு நானோஸ்கேல் புராசசிங் யூனிட், டெக்னாலஜி டிஸ்செமினேஷன், இன்குபேஷன் சென்டர் ஆகிய துறைகளில் ஏராளமான ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ப்படுவதோடு தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் திட்ட உதவிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

விபரங்களுக்கு: www.iifpt.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us