அறிவோம் எஸ்.பி.ஏ., | Kalvimalar - News

அறிவோம் எஸ்.பி.ஏ.,ஜனவரி 13,2020,12:05 IST

எழுத்தின் அளவு :

கட்டடக்கலையில் உயர்தர ஆராய்ச்சி மற்றும் கல்வியை உறுதிசெய்யும் நோக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டதே, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான ’ஸ்கூல் ஆப் பிளானிங் அண்டு ஆர்க்கிடெக்சர்’ (எஸ்.பி.ஏ.,).

கல்வி வளாகங்கள்: டெல்லி, போபால், விஜயவாடா

முக்கியத்துவம்
டெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் கீழ் செயல்பட்டுவந்த ஆர்க்கிடெக்சர் துறை 1955ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, ஸ்கூல் ஆப் டவுன் அண்டு கன்ட்ரி பிளானிங் உடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு, 1959ம் ஆண்டில் ‘ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்சர்’ என்று பெயர் மாற்றப்பட்டது. 

தொடர்ந்து பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களிலும், ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுவந்த நிலையில், 2008ம் ஆண்டில் போபால் மற்றும் விஜயவாடா ஆகிய இரண்டு இடங்களிலும் கூடுதல் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. கட்டடக்கலை துறையில், நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சிறந்த வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் இந்த கல்வி நிறுவனங்கள் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஆர்க்கிடெக்சர் மற்றும் பிளானிங் சார்ந்த படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிறுவனங்களாகவும் இவை விளங்குகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்புகள்: 
பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர்  - பி.ஆர்க்., 
பேச்சுலர் ஆப் பிளானிங் - பி.பிளான்.,

முதுநிலை படிப்புகள்:
மாஸ்டர் ஆப் ஆர்க்கிடெக்சர்
* அர்பன் டிசைன்
* இண்டர்ஸ்டிரியல் டிசைன்
* சஸ்டெயினபில் ஆர்க்கிடெக்சர்
* ஆர்க்கிடெக்சுரல் கன்சர்வேஷன்

மாஸ்டர் ஆப் பிளானிக்
* என்விரான்மெண்டல் பிளானிங்
* ஹவுசிங்
* ரீஜினில் பிளானிங்
* டிரான்ஸ்போர்டேஷன் அண்டு இன்பிராஸ்டரக்சர் பிளானிங்
* அர்பன் பிளானிங்

மாஸ்டர் ஆப் பில்டிங் இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மெண்ட் 
மாஸ்டர் ஆப் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் 

மேலும், பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., மற்றும் ஆன்லைன் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வு அடிப்படையில், உரிய இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: http://spa.ac.in/ , http://spabhopal.ac.in/ , https://spav.ac.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us