தேசிய சித்த மருத்துவ நிறுவனம் | Kalvimalar - News

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்ஜனவரி 08,2020,14:57 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக, சென்னை அருகே தாம்பரத்தில் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா கடந்த 2005ம் ஆண்டு துவக்கப்பட்டது.


முக்கியத்துவம்

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையான, சித்த மருத்துவத்தில் உயர்தர ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், உயர்கல்வியை வழங்கவும் துவக்கப்பட்ட இந்நிறுவனம், மருத்துவமனையையும் தன்னகத்தே கொண்டு சித்த மருத்துவத்தில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளையும் அளித்து வருகிறது. 


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடனும், புதுடில்லியில் உள்ள சென்ட்ரல் கவுன்சில் ஆப் இந்தியன் மெடிசின் வழிமுறைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டும் பல்வேறு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் இளநிலை படிப்புகள் வழங்கப்படுவதில்லை.


வழங்கப்படும் முதுநிலை சித்தா (எம்.டி..,) படிப்புகள்: 

பொது மருத்துவம் - 8 இடங்கள் (சேர்க்கை இடங்கள்)

குணபாடம் - 8 இடங்கள்

குழந்தை மருத்துவம் - 8 இடங்கள்

நோய் நாடல் - 7 இடங்கள்

நஞ்சு மருத்துவம் - 7 இடங்கள்

புற மருத்துவம் - 3 இடங்கள்

வர்மா மருத்துவம் - 3 இடங்கள்

சித்தர் யோகா மருத்துவம் - 2 இடங்கள்

என மொத்தம் 46 இடங்கள் எம்.டி., படிப்பில் வழங்கப்படுகின்றன. சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.


கல்வித்தகுதி: இவற்றில் சேர்க்கை பெற பேச்சுலர் ஆப் சித்தா மெடிசின் அண்டு சர்ஜரி (பி.எஸ்.எம்.எஸ்.,) படிப்பை படித்திருப்பதோடு நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெறவேண்டும்.


பிஎச்.டி., படிப்புகள்:

பொது மருத்துவம்

குணபாடம்

சிறப்பு மருத்துவம்

குழந்தை மருத்துவம்

நோய் நாடல்

நஞ்சு மருத்துவம்


ஆகிய 6 சிறப்பு பிரிவுகளில் வழங்கப்படும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்களில் 12 பேருக்கு ஆயுஷ் அமைச்சகத்தால் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


கல்வித்தகுதி: இப்படிப்புகளில் சேர்க்கை பெற சித்த மருத்துவத்தில் எம்.டி., படிப்போடு, நுழைவுத்தேர்வும் எழுத வேண்டும்.


விபரங்களுக்கு: https://nischennai.org/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us