அறிவோம் நிம்ஹான்ஸ் | Kalvimalar - News

அறிவோம் நிம்ஹான்ஸ்டிசம்பர் 28,2019,12:40 IST

எழுத்தின் அளவு :

நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் 

ஒன்றான பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் 

மெண்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்சஸ், மனநலம் மற்றும் 

நரம்பியல் அறிவியலுக்கான மிகச் சிறந்த நிறுவனம்!


சிறப்புகள்:

இத்துறையில், தேவையான நிபுணர்களை உருவாக்கும் நோக்கில், கர்நாடக அரசின் கீழ் செயல்பட்ட மனநல மருத்துவமனைகளுடன் இணைத்து 1954ம் ஆண்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்நிறுவனம் 1974ல் தன்னாட்சி பெற்று, நிம்ஹான்ஸ் (என்.ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ்.,)  என்ற பெயரில் தனித்துவத்துடன் செயல்பட துவங்கியது. 


பிறகு, 1994ல் பல்கலைக்கழக மானியக் குழுவால் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தும் வழங்கப்பட்டது. இன்றளவும் மனநலம் சார்ந்த மருத்துவக் கல்வியை வழங்குவதில் மட்டுமின்றி, மனநலம் சார்ந்த சிகிச்சையிலும், ஆராய்ச்சியிலும் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.


வழங்கப்படும் படிப்புகள்:


இளநிலை பட்டப்படிப்புகள்:

* பி.எஸ்சி., இன் நர்சிங்

* பி.எஸ்சி., இன் ரேடியோகிராபி

* பி.எஸ்சி., இன் அனஸ்தீசியா டெக்னாலஜி


முதுநிலை பட்டப்படிப்புகள்:

* எம்.எஸ்சி., -சைக்கியாட்ரிக் நர்சிங்

* எம்.எஸ்சி.,- பயோஸ்டேடிஸ்டிக்ஸ்

* மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த்

* எம்.டி., -சைக்கியாட்ரி


ஆராய்ச்சி படிப்புகள்:

* எம்.பில்.,-பயோபிசிக்ஸ், கிளினிக்கல் சைக்காலஜி, நியூரோசயின்சஸ், நியூரோபிசியாலஜி, சைக்கியாட்ரிக் சோசியல் வொர்க்


* பிஎச்.டி., - பயோபிசிக்ஸ், பயோஸ்டேடிஸ்டிக்ஸ், சைல்டு அண்ட் அடொலசன்ட் சைக்கியாட்ரி, கிளினிக்கல் நியூரோசயின்சஸ், கிளினிக்கல் பார்மகோலஜி அண்ட் டாக்சிகோலஜி, கிளினிக்கல் சைக்கியாலஜி, ஹுமன் ஜெனடிக்ஸ், மெண்டல் ஹெல்த் எஜுகேஷன், நியூரோகெமிஸ்ட்ரி, நியூரோஇமேஜிங் அண்ட் இண்டர்வென்ஷனல் ரேடியோலஜி, நியூரோலாஜிக்கல் ரீஹெபிலிடேஷன், நியூரோலஜி, நியூரோமைக்ரோலஜி, நியூரோபேத்தாலஜி, நியூரோவைராலஜி, நர்சிங், சைக்கியாட்ரிக் சோசியல் வொர்க், ஹிஸ்ட்ரி ஆப் சைக்கியாட்ரி, மெண்டல் ஹெல்த் ரீஹெபிலிடேஷன், சைக்கியாட்ரி, ஸ்பீச் பேத்தாலஜி அண்ட் ஆடியோலஜி.


டி.எம்., படிப்புகள்: சைல்டு அண்ட் அடொலசன்ட் சைக்கியாட்ரி, நியூரோஅனஸ்தீசியா அண்ட் நியூரோகிரிட்டிக்கல் கேர், நியூரோஇமேஜிங் அண்ட் இன்டர்வென்ஷனல் ரேடியோலஜி, நியூரோலஜி, நியூரோபேத்தாலஜி, அடிக்‌ஷன் சைக்கியாட்ரி மற்றும் எம்.சிஎச்., -நியோரோசர்ஜரி. 


டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்:

* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் கிளினிக்கல் பயோகெமிஸ்ட்ரி

* போஸ்ட் பேசிக் டிப்ளமா இன் சைக்கியாட்ரிக் / மெண்டல் ஹெல்த் நர்சிங் - டி.பி.என்.,

* போஸ்ட் பேசிக் டிப்ளமா இன் நியூரோசயின்ஸ் நர்சிங் - டி.என்.என்.,

* டிப்ளமா இன் கிளினிக்கல் நியூரோபிசியாலஜி டெக்னாலஜி -டி.சி.என்.டி.,

* சர்டிபிகேட் கோர்ஸ் இன் நியூரோபேத்தாலஜி டெக்னாலஜி


இவை தவிர, பல்வேறு துறைகளில் போஸ்ட் டாக்டோரல் மற்றும் பெலோஷிப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 


உதவித்தொகைகள்: இக்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., சேர்க்கை பெறுபவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரையிலும், போஸ்ட் டாக்டோரல் படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்களுக்கு மாதம் ரூ.72 ஆயிரம் வரையிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவைதவிர, ஆண்டு உதவித்தொகையும், இதர சலுகைகளும் உண்டு.


விபரங்களுக்கு: http://nimhans.ac.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us