அறிவோம் ஐ.ஐ.இ.எஸ்.டி., | Kalvimalar - News

அறிவோம் ஐ.ஐ.இ.எஸ்.டி.,டிசம்பர் 09,2019,17:49 IST

எழுத்தின் அளவு :

மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி-சிப்பூர், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று! 




அறிமுகம்:


நாட்டின் மூன்றாவது பொறியியல் கல்லூரியாக, 1856ம் ஆண்டில் ’பெங்கால் இன்ஜினியரிங் காலேஜ்’ எனும் பெயரில் உருவான இக்கல்வி நிறுவனம், நாட்டின் முதல் ஐ.ஐ.இ.எஸ்.டி., நிறுவனமாக 2014ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது, 8 பள்ளிகளின் கீழ், 16 துறைகள், 4 ஆயிரம் மாணவர்களுடன் ஏராளமான இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகிறது. 



நவீன வசதிகளுடன் சரவதேச தரத்தில், பல்துறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இக்கல்வி நிறுவனம், திறன் வாய்ந்த பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்குவதையும் கடமையாக கொண்டுள்ளது.



துறைகள் மற்றும் படிப்புகள்:


ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் அண்ட் அப்லைடு மெக்கானிக்ஸ், ஆர்கிடெக்சர், டவுன் அண்ட் ரீஜினல் பிளானிங், கெமிஸ்ட்ரி, சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, எர்த் சயின்சஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ், ஹூமன் ரிசோர்ஸ் மெனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜி அண்ட் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், மேத்மெடிக்ஸ் மற்றும் பிசிக்ஸ் ஆகிய துறைகளில் பி.டெக்., பி.ஆர்க்., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.ஓ.பி., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை வழங்குகிறது.



பிரத்யேக மையங்கள்:


சென்டர் ஆப் ஹெல்த்கேர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மற்றும் சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் பார் கிரீன் எனர்ஜி அண்ட் சென்சார் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டு முக்கிய மையங்களின் கீழ் பல்வேறு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 



இவைதவிர, இந்திய அரசின் நேஷனல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ட்ர்பிரனர்ஷிப் டெவெலப்மெண்ட் போர்டுடன் இணைந்து தாகூர் சென்டர் பார் கிரீன் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேஷன் (டி.சி.ஜி.டி.பி.ஐ.,) எனும் ஆய்வு மையத்தை, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு  தொழில்நுட்பங்களை கண்டறிந்து, அர்ப்பணிக்கும் பணியிலும் ஈடுபடுகிறது.



பயிற்சிகள்:


மாணவர்களுக்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளில் பிரத்யேக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சிகள், கோடைகால பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள், கேரியர் கவுன்சிலிங் ஆகியவற்றை வழங்குகின்றன.



விபரங்களுக்கு: www.iiests.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us