நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் | Kalvimalar - News

நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட்டிசம்பர் 06,2019,17:08 IST

எழுத்தின் அளவு :

பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் 1936ம் ஆண்டு துவக்கப்பட்ட நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் (என்.எஸ்.ஐ.,) பலவித 

மாற்றத்திற்கும், முன்னேற்றித்திற்கும் பிறகு  இந்திய அரசால், 1957ம் ஆண்டு முதன்மை நிறுவனமாக உயர்த்தப்பட்டது.


சிறப்புகள்:

ஆசியாவின் ஒரே சுகர் இன்ஸ்டிடியூட் ஆகவும் புகழ்ப்படும் இந்நிறுவனம் உத்தரபிரதேச மாநிலம்  கான்பூரில் செயல்படுகிறது. தரமான கல்வி மற்றும் பயிற்சி, உயர்தர ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.


வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள், உதவித்தொகை வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வேலை வாய்ப்புகள் அகியவற்றை வழங்கும் இந்நிறுவனம் சுகர் தொழில்நுட்பம் சார்ந்து ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாநாடுகளையும் நடத்தி, பல்வேறு சவால்களுக்கும் தீர்வு காண முயல்கிறது.


ஆய்வகங்கள்:

பிசிக்கல் கெமிஸ்ட்ரி ஆய்வகம், பயோ கெமிஸ்ட்ரி ஆய்வகம், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி ஆய்வகம், சுகர் தொழில்நுட்ப ஆய்வகம், ஆட்டோமேஷன் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆய்வகம் ஆகியவற்றைக் கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப தீர்வையும் அளிக்கிறது.


வழங்கப்படும் படிப்புகள்:

பி.ஜி.டிப்ளமா இன் சுகர் இன்ஜினியரிங்

பி.ஜி.டிப்ளமா இன் சுகர் டெக்னாலஜி

பி.ஜி.டிப்ளமா இன் இன்டஸ்ட்ரியல் பெர்மென்டேஷன் அண்ட் ஆல்கஹால் டெக்னாலஜி

பி.ஜி.டிப்ளமா இன் சுகர்கேன் புரொடக்டிவிட்டி அண்ட் மெச்சூரிட்டி மேனேஜ்மெண்ட்

பி.ஜி.டிப்ளமா இன் இன்டஸ்ட்ரியல் இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் புராசஸ் ஆட்டோமேஷன்

பி.ஜி.டிப்ளமா இன் குவாலிட்டி கன்ட்ரோல் அண்ட் என்விரான்மென்டல் சயின்ஸ்

சுகர் பாய்லிங் சர்டிபிகெட் கோர்ஸ்

சுகர் இன்ஜினியரிங் சர்டிபிகேட் கோர்ஸ்

சர்டிபிகேட் கோர்ஸ் இன் குவாலிட்டி கன்ட்ரோல்

எப்.என்.எஸ்.ஐ., இன் சுகர் டெக்னாலஜி அல்லது சுகர் கெமிஸ்ட்ரி

எப்.என்.எஸ்.ஐ., இன் சுகர் இன்ஜினியரிங்

எப்.என்.எஸ்.ஐ., இன் பெர்மென்டேஷன் டெக்னாலஜி


தகுதிகள் மற்றும் சேர்க்கை முறை:

படிப்பு மற்றும் பாட நிலைக்கு ஏற்ப பிளஸ் 2 அல்லது துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவுத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.


விபரங்களுக்கு: http://nsi.gov.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us