அரசியல் அறிவியல் எனப்படும் பொலிடிகல் சயின்சஸ் படிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன?
ஏப்ரல் 27,2008,00:00 IST
இந்தப் படிப்பை படிப்பவரில் பெரும்பாலானவர் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என விரும்புபவர்களாக இருக்கிறார்கள்
. ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நடைமுறைப் படிப்பாக இது இருப்பதால் குருப் 1, சிவில் சர்விசஸ் போன்ற உயரிய லட்சியங்களை கொண்டிருப்பவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கிறார்கள். இதைப் படிக்கும் போது அப்படியே மனப்பாடம் செய்யாமல், நன்றாக புரிந்து படிக்க வேண்டும். எதைப் படித்தாலும் அதில் நமக்கான ஒரிஜினல் கருத்து ஒன்றை யோசித்து மனதில் கொள்ள வேண்டும். முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களைக் கொண்டு விடைகளை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் அறிவியலை நன்றாகப் புரிந்து படிப்பவருக்கு சிவில் சர்வீசஸ்
, இதழியல், கல்வி, என்.ஜி.ஓ., உலக வங்கி, ஐ.நா. மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதைப் படிப்பவர்கள் நல்ல தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.