அறிவோம் டி.ஐ.எப்.ஆர்., | Kalvimalar - News

அறிவோம் டி.ஐ.எப்.ஆர்.,நவம்பர் 26,2019,12:29 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் அடாமிக் எனர்ஜி துறையின் கீழ் ஒரு தேசிய மையமாக விளங்கும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், ஒரு நிகர்நில பல்கலைக்கழகத்திற்கான அந்தஸ்தையும் பெற்றுள்ளது.


அறிமுகம்:

சர் தொராப்ஜி டாடா அறக்கட்டளையின் கீழ் 1945ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், தற்போது மும்பையை தலைமையிடமாகவும், நாட்டின் முக்கிய நகரங்களில் பிரத்யேக மையங்களையும் கொண்டு செயல்பட்டுவருகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகளையும் வழங்குகிறது.


பிரிவுகள்:

மும்பையில் உள்ள டி.ஐ.எப்.ஆர்., பிரதான வளாகத்தில் கணிதம், தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ், நேச்சுரல் சயின்சஸ் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. நேச்சுரல் சயின்சஸ் பிரிவின்கீழ், பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், அஸ்ட்ரோனமி மற்றும் அஸ்ட்ரோபிசிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் சயின்ஸ், ஹை எனர்ஜி பிசிக்ஸ், நியூக்கிளியர் மற்றும் அடோமிக் பிசிக்ஸ், தியரெடிக்கல் பிசிக்ஸ் ஆகிய துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


பிரத்யேக மையங்கள்:

* சென்டர் பார் அப்ளிகபில் மேத்மெடிக்ஸ், பெங்களூரு

* ஹோமி பாபா சென்டர் பார் சயின்ஸ் எஜுகேஷன், மும்பை

* இன் டர்நேஷனல் சென்டர் பார் தியரெடிக்கல் சயின்சஸ், பெங்களூரு

* நேஷனல் சென்டர் பார் பயோலஜிக்கல் சயின்ஸஸ், பெங்களூரு

* நேஷனல் சென்டர் பார் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ், புனே

* டி.ஐ.எப்.ஆர்., சென்டர் பார் இன்டர்டிசிப்ளினரி சயின்சஸ், ஹதராபாத் 


படிப்புகள் மற்றும் உதவித்தொகைகள்:

இந்த பிரத்யேக மையங்கள் அனைத்திலும் அந்தந்த துறை சார்ந்த முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உதவித்தொகையுடன் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, பெங்களூருவில் உள்ள சென்டர் பார் அப்ளிகபில் மேத்மெடிக்ஸ் நிறுவனத்தில், மாதம் 35 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித்தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.,-பிஎச்.டி., படிப்பு வழங்கப்படுகிறது. முதலாம் ஆண்டில் மாதம் 21 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டில் மாதம் 31 ஆயிரம் ரூபாயும், அதன்பிறகு, மாதம் 35 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவைதவிர, ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.


தேர்வு முறை:

பொதுவாக, துறை சார்ந்த பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், டி.ஐ.எப்.ஆர்., நிறுவனத்தால் நடத்தப்படும் பிரத்யேக நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 


விபரங்களுக்கு: www.tifr.res.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us