அறிவோம் இ.எப்.எல்.யூ., | Kalvimalar - News

அறிவோம் இ.எப்.எல்.யூ., நவம்பர் 21,2019,16:17 IST

எழுத்தின் அளவு :

கடந்த 1958ம் ஆண்டு, நிறுவப்பட்ட சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலீஷ் (சி.ஐ.இ.,) எனும் கல்வி மையம், சில மாற்றங்களைக் கடந்து தி இங்கிலீஷ் அண்ட் பாரின் லேங்குவேஜ்ஸ் யுனிவர்சிட்டி, என இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டத்தின்படி, 2007ம் ஆண்டில் ஒரு மத்திய பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது. 


வளாகங்கள்: 

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இப்பல்கலைக்கழகம், லக்னோ மற்றும் ஷில்லாங் பகுதிகளிலும் தனது கல்வி வளாகங்களை கொண்டுள்ளது. 


சிறப்புகள்:

ஆங்கில மொழியில் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளிலும் உயர் தரத்தில் ஆசிரியர்களை தயார்ப்படுத்துவதையும், ஆராய்ச்சிகள் மேற்கொள்வதையும், பல துறைகளின் பயன்பாட்டோடு நாட்டின் கலாச்சார, பண்பாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. ஆங்கிலம் மற்றும் 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் இந்த பல்கலைக்கழகம், தெற்கு ஆசியாவிலேயே ஒரு தனித்துவமான கல்வி நிறுவனமாக விளங்குகிறது. 


கற்பிக்கப்படும் மொழிகள்:

அரபிக், சைனீஷ், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பேனீஷ், இத்தாலியன், ரஷ்யன், ஜாப்பனீஷ், கொரியன் மற்றும் பெர்ஷியன். 


படிப்புகள்: 

இ.எப்.எல்., பல்கலை என சுருக்கமாக அழைக்கப்படும் இக்கல்வி நிறுவனம், 26 துறைகளைக் கொண்டு, சான்றிதழ், டிப்ளமா, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் வழங்குகிறது. மொழிப்புலமைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு மட்டுமின்றி, ஆசிரியர் கல்வியியல் படிப்பையும், ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பையும் வழங்குவது கூடுதல் சிறப்பு.


இதர பயிற்சிகள்:

இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சியை அளிக்கிறது. மொழி பயிற்சியை பொறுத்தவரை, சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளின் தேவைக்கு ஏற்ப குறுகிய கால, நீண்ட கால படிப்புகளையும் வழங்குகிறது. இதன்மூலம், ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவன ஊழியர்கள், அரசாங்க அதிகாரிகள், அலுவலர்கள், கார்ப்ரேட் நிறுவன பணியாளர்கள் என பல தரப்பினருக்கும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் சிறப்பு பயிற்சியை வழங்கி வருகிறது. 


அத்தோடு மட்டுமல்லாமல், சென்டர்ஸ் பார் இங்கிலீஷ் லேங்குவேஜ் டீச்சிங் (சி.இ.எல்.டி.எஸ்.,) மற்றும் இன்டர்நேஷனல் டிரைனிங் புரொகிராம் (ஐ.டி.பி.,) மையமாகவும் செயல்படுகிறது. 30 சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு சர்வதேச அளவிலான கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பன்னாட்டு மாநாடுகள், பயிலரங்குகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 


விபரங்களுக்கு: www.efluniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us