அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - என்.ஐ.ஓ., | Kalvimalar - News

அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - என்.ஐ.ஓ.,நவம்பர் 15,2019,12:14 IST

எழுத்தின் அளவு :

கோவாவை தலைமையிடமாகக் கொண்டு கொச்சி, மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓசனோகிராபி, மொத்தமுள்ள 37 கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்டிரியல் ரிசர்ச் ஆய்வு நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று!

சிறப்புகள்:
கடந்த 1966ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கடலியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் சர்வதேச புகழ் பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்திய பெருங்கடலின் முக்கிய தன்மைகள் குறித்து ஆய்வு செய்வதை பிரதான நோக்கமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், இதுநாள் வரை 5 ஆயிரத்திற்கும் மேலான ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும், கடலியல் சார்ந்த ஆராய்ச்சிகளிலும், இந்நிறுவனத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், பெருங்கடல்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரே சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய ஆராய்ச்சி துறைகள்: 
பயோலாஜிக்கல், கெமிக்கல், ஜியோலாஜிக்கல் / ஜியோபிசிக்ஸ், பிசிக்கல், இன்ஜினியரிங், மரைன் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் மரைன் ஆர்க்கியாலஜி. 

வழங்கப்படும் படிப்பு: 
மரைன் பயோலஜி, இகோடாக்சிகாலஜி, பயோஇன்வேஷன், மரைன் பயோடெக்னாலஜி, மாலிகுளர் பயோலஜி, மரைன் கெமிஸ்ட்ரி, மரைன் ஜியோலஜி அண்ட் ஜியோபிசிக்ஸ், பிசிக்கல் ஓசினோகிராபி, ஓசன் இன்ஜினியரிங், மரைன் இன்ஸ்ட்ருமெண்டேஷன், மரைன் ஆர்க்கியோலஜி ஆகிய பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பு.

தகுதிகள்: 
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில், எம்.எஸ்சி., / பி.இ., / பி.டெக்., / எம்.ஏ., - மரைன் ஆர்க்கியாலஜி பட்டம் மற்றும் ஏதேனும் ஒரு தேசிய அளவிலான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி. 

மாணவர் சேர்க்கை முறை: 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் பிஎச்.டி., படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவர். பொதுவாக, இதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டு மே மாதத்துடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெறுகிறது.

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்:
ஓசினோகிராபி சார்ந்த பிரிவுகளில் சிறு ஆய்வுகள் மேற்கொள்ள விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு என்.ஐ.ஓ., இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகிறது. உரிய சான்றிதழ்களுடன், இந்நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விபரங்களுக்கு: www.nio.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us