பெலிக்ஸ் உதவித்தொகை | Kalvimalar - News

பெலிக்ஸ் உதவித்தொகைநவம்பர் 12,2019,12:59 IST

எழுத்தின் அளவு :

யு.கே.,வில் உயர்கல்வி கற்க விரும்பும் சிறந்த இந்திய மாணவர்களுக்கு பெலிக்ஸ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெலிக்ஸ் அறக்கட்டளை சார்பில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து இந்திய மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


கல்வி நிறுவனங்கள்: 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (எஸ்.ஓ.ஏ.எஸ்.,) - லண்டன் பல்கலைக்கழகம்.


படிப்புகள்: 

முழு நேரமாக எந்த ஒரு துறையிலும் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது டி.பில்., படிப்பு. ஏற்கனவே முதுநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் மீண்டும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பிற்காக இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இயலாது.


உதவித்தொகை விபரம்: 

முழுமையான கல்விக் கட்டணம், இருப்பிடம் மற்றும் உணவுக்காக ரூ.12 லட்சம் வரை, ஒருமுறை இந்தியாவில் இருந்து யு.கே.,விற்கு சென்று வருவதற்கான விமானக் கட்டணம் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 5 மாணவர்கள் வரை இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறலாம்.


தகுதிகள்:

* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

* இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க கூடாது. 

* உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில், கல்விக் காலம் முடிந்தவுடன் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: 

உதவித்தொகைக்கு என்று பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஜனவரி மாதத்திற்குள் விரும்பும் பாடத்திட்டத்திற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி நாள்: 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஜனவரி, 2020

ரீடிங் பல்கலைக்கழகம் - ஜனவரி 30, 2020

எஸ்.ஓ.ஏ.எஸ்., - ஜனவரி 31, 2020


விபரங்களுக்கு: https://www.felixscholarship.org/ 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us