அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்..,-ஐ.எச்.பி.டி., | Kalvimalar - News

அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்..,-ஐ.எச்.பி.டி.,நவம்பர் 05,2019,13:07 IST

எழுத்தின் அளவு :

உயிர் வளங்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் வாயிலாக நிலையான உயிர் பொருளாதாராத்தை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாக்கப்பட்டது, கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்-ன் மற்றுமொரு ஆராய்ச்சி நிறுவனமான, இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் பயோரிசோசர்ஸ் டெக்னாலஜி!


ஹிமாச்சல பிரதேசம் பாலம்பூரில் உள்ள இந்நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இமாலயப் பகுதிகளில் உள்ள உயிர் வளங்களை கண்டறியவும், மேம்படுத்தவும், தேவையானவற்றை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதை இந்நிறுவனம் குறிக்கோளாக கொண்டுள்ளது.


சிறப்புகள்:  நவீன வசதிகளை கொண்ட ஆய்வகங்கள், சர்வதேச அங்கீகாரம் பெற்ற மூலிகை பூங்கா, ரிமோட் சென்சிங் அண்ட் மேப்பிங் வசதிகள்; அத்தியாவசிய மூலிகைகள் மற்றும் மூலிகை மருந்துகள் குறித்த ஆய்வு என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்நிறுவனம், சமுதாயம் மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களுக்கு அறிவியல் பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்வு காணும் வகையில் ஆர்வமிக்க இளம் ஆராய்ச்சியாளர்கள் பலரை கொண்டு செயல்படுகிறது. 


பயிற்சிகள் மற்றும் படிப்புகள்

பல்வேறு தொழில் வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், குறுகிய கால ஆய்வு திட்டங்கள் என பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், முழுநேர பிஎச்.டி., படிப்புகளையும் வழங்குகிறது.


தகுதிகள்

* அறிவியல் துறையில் வழங்கப்படும் பிஎச்.டி., படிப்பில் சேர நெட்-ஜே.ஆர்.எப்., / எஸ்.ஆர்.எப்., உட்பட சி.எஸ்.ஐ.ஆர்., / யு.ஜி.சி., / ஆர்.ஜி.என்.எப்., / டி.பி.டி.,  / ஐ.சி.எம்.ஆர்., /  இன்ஸ்பயர் / கேட் / ஜி-பி.ஏ.டி., அல்லது இதர உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


* முதுநிலை பட்டப்படிப்பில், அக்ரிகல்ச்சுரல் சயின்சஸ், பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, மைக்ரோபயல் பயோடெக்னாலஜி, பெர்மெண்டேஷன் டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், பாட்டனி. எண்டோமொலஜி, பாரஸ்ட்ரி அண்ட் என்விரான்மெண்டல் சயின்சஸ், புட் சயின்ஸ், புட் டெக்னாலஜி, புளோரிகல்ச்சர், மைக்ரோபயாலஜி, இண்டஸ்டிரியல் மைக்ரோபயாலஜி, நானோ டெக்னாலஜி, நானோ பயோசயின்சஸ், பிளாண்ட் பாதாலஜி உட்பட பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி. 


* ஸ்டேடிஸ்டிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது பயோ இன்பர்மேடிக்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / புட் டெக்னாலஜி / பயோடெக்னாலஜி  பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டத்துடன் தேசிய உதவித்தொகை திட்டத்தில் தேர்ச்சி.


விபரங்களுக்கு: www.ihbt.res.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us