நீர் விளையாட்டுகளுக்கு ஒரு பிரத்யேக கல்வி நிறுவனம் | Kalvimalar - News

நீர் விளையாட்டுகளுக்கு ஒரு பிரத்யேக கல்வி நிறுவனம்நவம்பர் 02,2019,17:16 IST

எழுத்தின் அளவு :

நீர் விளையாட்டு தொடர்பான பயிற்சிகள், படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை ஆகியவற்றிற்கான தலைமை நிறுவனம், கோவாவில் செயல்படும் தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வாட்டர் ஸ்போர்ட்ஸ் - (என்.ஐ.டபிள்யு.எஸ்.,).


இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் 1990ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், நீர் விளையாட்டுகளுக்கான முதல் கல்வி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நீர் விளையாட்டுக்கள் சார்ந்த பயிற்சிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உரிமம் வழங்குதல், அவற்றை புதுப்பித்தல், கண்காணித்தல், ஆய்வு மேற்கொள்ளுதல், மேம்படுத்துதல் என பல்வேறு தொடர் செயல்பாடுகளில் இந்நிறுவனம் ஈடுபடுகிறது.


முக்கிய துறைகள்:

* போட் ஹேண்டிலிங்

* செய்லிங்

* விண்ட்சர்பிங்

* வாட்டர் ஸ்கீயிங்

* ரிவர் ரேப்டிங்

* கயாகிங்

ஆகிய துறைகளில் பல்வேறு பயிற்சிகளை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.


தொழில்முறை படிப்புகள்:

* லைப்கார்ட்ஸ்

* வாட்டர்ஸ்போர்ட் ஆப்ரேட்டர்ஸ்

* வாட்டர்-பார்க் லைப்கார்ட்ஸ்

* சர்ப் லைப்-சேவிங் டெக்னிக்ஸ் பார் பீச் லைப்கார்ட்ஸ்

* பவர் போட் ஹேண்ட்லிங்

* பி.டபிள்யு.சி., / ஜெட் ஸ்கீ கன்வர்சன்

* பாராசெய்ல் ஆப்ரேஷன் / பாரசெய்ல் கன்வர்ஷன்

* அவுட்போர்டு போட் மெயிண்டனன்ஸ்


சான்றிதழ் படிப்புகள்:

ஸ்கில் படிப்புகள், புரொபஷனல் படிப்புகள், மெயிண்டனன்ஸ் படிப்புகள் மற்றும் மேனேஜ்மெண்ட் படிப்புகள் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 27 சான்றிதழ் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளின் காலகட்டம் 2 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை மட்டுமே.


பதிவுசெய்தல்:

முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அனுப்புவதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அல்லது பேக்ஸ் மூலமாக பதிவுசெய்வதன் மூலமாகவோ, ஒருவர் தனக்கான இடத்தை உறுதிபடுத்தலாம். ஆனால், கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்துதல் மற்றும் இருக்கும் காலியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, ஒருவருக்கான இடம் உறுதி செய்யப்படும்.


சான்றிதழ்:

பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு இந்நிறுவனம் வழங்கும் உரிமம் மற்றும் சான்றிதழ் போன்றவை, 2 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. எனவே, குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன், மறுமதிப்பீடு செய்ய வேண்டும். 


குறிப்பு: இக்கல்வி நிறுவனம் வழங்கும் உரிமங்களுக்கு, இக்கல்வி நிறுவனமே முழு பொறுப்பு.  நீர் விளையாட்டின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக, சம்பந்தப்பட்ட உரிமங்களையும், சான்றிதழ்களையும் திரும்பப்பெறும் உரிமை, இக்கல்வி நிறுவனத்திற்கு உண்டு.


விபரங்களுக்கு www.niws.nic.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us