உலகின் முதல் ஏ.ஐ., பல்கலை | Kalvimalar - News

உலகின் முதல் ஏ.ஐ., பல்கலைஅக்டோபர் 31,2019,15:47 IST

எழுத்தின் அளவு :

உலகையே ஆட்டி படைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு எனும் ’ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்’ குறித்த தாக்கம் பெரும்பாலான துறைகளில் ஏற்கனவே எதிரொலிக்க தொடங்கிவிட்டது. இவை சார்ந்த படிப்புகளும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. 


இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ’ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்’ படிப்புகளுக்காகவே ஒரு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டுள்ளது. ’முகமது பின் சயத் யுனிவர்சிட்டி ஆப் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பல்கலையில் நவீன வசதிகளுடன் இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.


வழங்கப்படும் படிப்புகள்:

* கம்ப்யூட்டர் விஷன்

* மிஷின் லேர்னிங்

* நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங்

ஆகிய பிரிவுகளில் எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் படிப்பு மட்டும் 2021ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது.


தகுதிகள்:

எம்.எஸ்சி., படிப்புகளைப் பொறுத்தவரை, அந்நாட்டு கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். டோபல் தேர்வில் 90 மதிப்பெண் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் 6.5 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் ஜீ.ஆர்.இ., தேர்வு எழுதியிருக்கும்பட்சத்தில் அதன் மதிப்பெண் மற்றும் நோக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 


பிஎச்.டி., படிப்புகளுக்கு முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் மேற்கண்ட ஆங்கில மொழிப் புலமையும் அவசியம். அவற்றோடு ஆய்வு திட்டத்தையும் கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும். 


ஆராய்ச்சி பிரிவுகள்:

ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இப்பல்கலையில், 

*சர்வீசஸ் அண்ட் குவாலிட்டி ஆப் லைப்

*இண்டஸ்டிரியல் அண்ட் மேனுபாக்சரிங் டெக்னாலஜிஸ்

* பியூச்சர் கேம் சேஞ்சர்

* சஸ்டெயினபிலிட்டி ஆப் விட்டல் ரிசோசர்ஸ் அண்ட் என்விரான்மெண்ட் 

ஆகிய நான்கு அம்சங்களை மையமாகக் கொண்டு சீரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


விபரங்களுக்கு: www.mbzuai.ac.ae

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us