இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் | Kalvimalar - News

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ்அக்டோபர் 14,2019,12:25 IST

எழுத்தின் அளவு :

அஸ்ட்ரானமி, அஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் பிசிக்ஸ் துறைகள் சார்ந்த ஆராய்ச்சிகளை 

மேற்கொள்வதற்கான நாட்டின் முன்னோடி ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூருவை 

தலைமையிடமாகக் கொண்டுள்ள, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ்!


1786ம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தில் கண்காணிப்பு மையமாக செயல்படத் துவங்கிய இந்நிறுவனம், பல்வேறு நிலை வளர்ச்சிக்கு பிறகு, 1975ம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிதியுதவியுடன் இயங்கும் இந்நிறுவனம், கொடைக்கானல், காவலூர், கவுரிபிடனுர் மற்றும் ஹன்லே ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை மையங்களை கொண்டுள்ளது. 


சோலார் மற்றும் அட்மாஸ்பெரிக் பிசிக்ஸ் குறித்த ஆய்வை மேற்கொள்வதில் முதன்மை மையமாக கொடைக்கானல் திகழ்கிறது. காவலூர் மையத்தில் ஆப்டிக்கல் ஆய்வும், கவுரிபிடனுர் மையத்தில் ரேடியோஹெலியோகிராப் ஆய்வும், ஹன்லே மையத்தில் ஹை ஆல்டிடியூட் கம்மா ரே ஆய்வும் முக்கிய இடம் பெறுகிறது.


வழங்கப்படும் படிப்புகள்:

 

ஒருங்கிணைந்த எம்.டெக்.,-பிஎச்.டி., 

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அப்ளைடு ஆப்டிக்ஸ் மற்றும் பொடோனிக்ஸ் துறையுடன் இணைந்து, அஸ்ட்ரோனமிகல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் துறையில் ஒருங்கிணைந்த எம்.டெக்.,-பிஎச்.டி., பட்டத்தை வழங்குகிறது. முதலில் 2 ஆண்டுகளில் 4 செமஸ்டர்கள் கொண்ட எம்.டெக்., படிப்பை முதலில் நிறைவு செய்ய வேண்டும். அதில், போதிய மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில் பிஎச்.டி., பதிவு செய்துகொள்ளலாம். இப்படிப்பில் சேர்க்கை பெற உரிய இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டிசம்பர் மாதத்தில் நடைபெறும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதும் அவசியம்.


உதவித்தொகை

எம்.டெக்., படிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 16 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. முன்றாவது ஆண்டிலிருந்து அதாவது, பிஎச்.டி., படிப்பில் சேர்ந்ததில் இருந்து மாதம் ரூ. 25 ஆயிரமும், ஐந்தாம் ஆண்டிலிருந்து ரூ. 28 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


நேரடி பிஎச்.டி., 

நேரடி பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற எம்.எஸ்சி., அல்லது எம்.டெக்., படிப்பில், பிசிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், அப்ளைடு மேத்மெடிக்ஸ், அஸ்ட்ரானமி, எலக்ட்ரானிக்ஸ், பொடானிக்ஸ், ஆப்டிக்ஸ், இன்ஜினியரிங் பிசிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன், ஆப்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். மேலும், ஜெஸ்ட் நுழைவுத்தேர்வை எழுதிருக்க வேண்டும் அல்லது இந்நிறுவனம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். 


இன்டர்ன்ஷிப்


நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த அறிவியல் மாணவர்கள், இந்நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். 


விபரங்களுக்கு: www.iiap.res.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us