அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர். - சி.எல்.ஆர்.ஐ., | Kalvimalar - News

அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர். - சி.எல்.ஆர்.ஐ.,அக்டோபர் 01,2019,15:59 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற, கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ச் - சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பு, நாட்டில் தோல் வணிகத்தை மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை பெருக்கவும், சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் -சி.எல்.ஆர்.ஐ., எனும் நிறுவனத்தை 1948ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி துவக்கியது.


சி.எல்.ஆர்.ஐ., அறிமுகம்

தோல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, துறை சார்ந்த மேம்பாட்டிற்காக மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 70 ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டுவருகிறது. தோல் துறை சார்ந்த கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, வடிவமைப்பு, பரிசோதனை, திட்டமிடல், சமூக மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பிரதான மையமாகவும் இந்நிறுவனம் திகழ்கிறது. 


மையங்கள்:

சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஆம்பூர், ராணிபேட், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல் கொல்கத்தா, கான்பூர், உன்னாவ், பந்தர், ஆக்ரா, நொய்டா, ஜலந்தர் ஆகிய பகுதிகளிலும் தோல் மற்றும் தோல் சார்ந்த உற்பத்தி மையங்களை கொண்டுள்ளது. 


படிப்புகள்:

பி.ஜி., டிப்ளமா இன் லெதர் டெக்னாலஜி

பி.ஜி., டிப்ளமா இன் லெதர் புராடக்ட்ஸ் டெக்னாலஜி

டிப்ளமா இன் லெதர் புராசசிங்

டிப்ளமா இன் கூட்ஸ் மேனுபாக்ட்சர்

டிப்ளமா இன் கார்மன்ட்ஸ் மேனுபாக்ட்சர்

டிப்ளமா இன் புட்வேர் மேனுபாக்ட்சர்

உட்பட தோல் துறையில் திறன்மிக்க மனிதவளத்தை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளையும், படிப்புகளையும் வழங்குகிறது.


தகுதிகள்:

முதுநிலை டிப்ளமா படிப்புகளில் சேர்க்கை பெற உரிய இளநிலை பட்டப்படிப்பும், டிப்ளமா படிப்புகளுக்கு பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் கல்வித்தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பங்கள்:

வாட்டர்லஸ் குரோம் டன்னிங், லெதர் புராசசிங், லெதர் கெமிக்கல்ஸ், என்சைமேட்டிக் புராடக்ட்ஸ், என்விரான்மென்டல் டெக்னாலஜி, ஹெல்த்கேர் புராடக்ட்ஸ், வேல்யூ ஏடட் புராடக்ட்ஸ், டிவைஸ் மற்றும் ரூரல் டெக்னாலஜி ஆகியவற்றில் தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளதோடு மட்டுமின்றி காப்புரிமையும் பெற்றுள்ளது. துறை சார்ந்த தொழில்நிறுவனங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, தோல் துறையில் தொடர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் சி.எல்.ஆர்.ஐ., ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


விபரங்களுக்கு: https://www.clri.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us