துணை மருத்துவ படிப்புகள் | Kalvimalar - News

துணை மருத்துவ படிப்புகள்செப்டம்பர் 19,2019,12:05 IST

எழுத்தின் அளவு :

இன்றைய நவீன மருத்துவத்துறை வளர்ச்சியால், நூற்றுக்கணக்கான மருத்துவ பிரிவுகள் 

உருவாகியுள்ளன. இந்த சூழலில் பரிசோதனை, பொது மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, 

அறுவை சிகிச்சைக்கு பிறகான கண்காணிப்பு என அனைத்திலும், தொழில்நுட்பங்களின் பங்கு மிக மிக அவசியமானதாக உள்ளது. 


இத்தகைய அனைத்து மருத்துவ சிகிச்சை நிலைகளிலும் சரி, மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் சரி, மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக, துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். 


இன்னும் சொல்ல வேண்டுமானால், துணை மருத்துவ பணியாளர்கள் இன்றி, மருத்துவர்களால் கூட உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியாது! இத்தகைய ஏராளமான துணை மருத்துவ படிப்புகள் குறித்து இனி பார்ப்போம்.


பொதுவாக, துணை மருத்துவ படிப்புகளை படிக்க பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவை தேர்வு செய்துபடித்திருப்பது அவசியம். எனினும், சில படிப்புகளுக்கு இதற்கு விதிவிலக்கு. 


பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் ரெஸ்பிரேட்டரி தெரபி (பி.எஸ்சி.,-ஆர்.டி.,)


படிப்பு காலம்: 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும்.


பணி விபரம்: சுவாசக்கோளாறு குறித்த பரிசோதனை, சிகிச்சை, கல்வி மற்றும் புனர்வாழ்வு போன்றவற்றில் ஒரு ரெஸ்பிரேட்டரி தெரபிஸ்ட் சிறப்பு கவனம் செலுத்தலாம். சி.ஓ.பி.டி., மூச்சுக்குழாய், நுரையீரல் நோய், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சிகிச்சைகளிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பெரும்பாலும், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகங்களில் பணிபுரிவர்.


பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் கார்டியாக் பர்ப்யூஷன் டெக்னாலஜி  (பி.எஸ்சி.,-சி.பி.டி.,)


படிப்பு காலம்: 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும்.


பணி விபரம்: கார்டியோதொராசிக் அனாடமி, பிசியாலஜி, பேத்தோபிசியாலஜி, பார்மாகோலஜி, பேட்டல் அண்ட் நியோநாட்டல் கார்டியாக் டெவலப்மெண்ட் மற்றும் பர்ப்யூசன் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் பி.எஸ்சி.,-சி.பி.டி., படிப்பில் இடம்பெறும். இவற்றை படித்த &'கிளினிக்கல் பர்ப்யூசனிஸ்ட்’ இதய அறுவை சிகிச்சை குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறார். நோயாளிகளின் உயிர் காக்கும் பணிகளில் நேரடியாக ஈடுபடுகிறார். உயிர் காக்கும் உபகரணங்களை உரிய நேரத்தில் பொருத்துவதும், தொடர்ந்து கண்காணிப்பதும் இவரது பிரதான பணி. பேச்சுலர் ஆப் சயின்ஸ் -மெடிக்கல் லேபராட்டரி  டெக்னாலஜி 


படிப்புகாலம்: 3 அல்லது 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் / கணிதம் / தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பணிவிபரம்: நோய் தடுப்பிலும் சரி, நோயை கண்டரிவதிலும் சரி, சிகிச்சைக்கும் சரி மருத்துவ ஆய்வக பரிதோனை மிக அவசியமானது என்பது நன்கு அறிவோம். பொதுவாக, ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பலவிதமான மருத்துவ பரிதோனைகளை இந்த படிப்பை படித்தவர்களே மேற்கொள்கின்றனர். நோயாளிகளுடனான நேரடி தொடர்பு குறைவாக இருந்த போதிலும், மருத்துவ பரிசோதனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இவர்களுக்கான தேவை அனைத்து மருத்துவ பரிசோதனை மையங்களிலும், மருத்துவமனைகளிலும் என்றும் உண்டு. 


பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் நியூக்ளியர் மெடிசின் டெக்னாலஜி


படிப்புகாலம்: 3 அல்லது 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணித பாடப்பிரிவை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பணிவிபரம்: அணுகதிர்வீச்சினை முறையாக செலுத்தி நோயின் தன்மையை கண்டறியும் வகையில் தொழில்நுட்பத்தை திறம்பட கையாள இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. ரேடியாகிராபி, மெடிக்கல் இமேஜிங் மற்றும் தெரபி நடைமுறைகள், ரேடியோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு பிசிக்ஸ், ரேடியேசன் பிசிக்ஸ் மற்றும் எக்யூப்மென்ட் பிசிக்ஸ் உள்ளிட்டவற்றில் போதிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது இத்துறையில் திறம்பட செயல்பட மிக அவசியமாகிறது.  தொழில்நுட்ப அறிவு, கதிர்வீச்சின் தன்மை குறித்த அறிவு ஆகியவற்றுடன் போதிய அனுபவத்தையும் பெற்றவர்களுக்கு இன்றைய மருத்துவ உலகில் முக்கிய இடம் உண்டு.பேச்சுலர் ஆப் புரொஸ்தெடிக்ஸ் அண்ட் ஆர்த்தோடிக்ஸ் 


படிப்புகாலம்: 4 அல்லது 4.5 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணித பாடப்பிரிவை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பணிவிபரம்: ரீகேபிலிடேஷன் கவுன்சில் ஆப் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த புதிய படிப்பு, லொகொமோட்டார் மற்றும் நரம்பு தசை குறைபாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. ஒருவரது தேவைக்கு ஏற்ப செயற்கையான உடல் கருவிகள் அல்லது உபகரணங்கள் மூலம் அவரை இயல்பாக செயல்படவைப்பது இத்துறை நிபுணர்களின் சிறப்பு.


பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் நியூரோ எலக்ட்ரோபிசியாலஜி


படிப்பு காலம்: 3 அல்லது 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் அல்லது கணித பாடப்பிரிவில் தேர்ச்சி


பணிவிபரம்: நியூரோ டெக்னாலஜிஸ்ட்-களை உருவாக்கும் இப்படிப்பில், உயிரியல் செல்கள் மற்றும் திசுக்களின் பண்புகள் குறித்தும் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது உறுப்பில் ஏற்படும் மின் அழுத்த மாற்றத்தை அளவிடவும், மின் அழுத்தம் சார்ந்த பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இப்படிப்பை சிறப்பாக படித்து நிறைவு செய்வதன் வாயிலாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். கல்வி அல்லது ஆராய்ச்சி சார்ந்த பணிகளிலும் ஈடுபடலாம்.


பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி


படிப்பு காலம்: 3 அல்லது 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி


பணிவிபரம்: மருத்துவமனைகளில் பொதுவாக உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும் பிரதான இடமான ஐ.சி.யூ., எனப்படும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் மீது முழு கவனம் செலுத்துபவர்கள் கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜிஸ்ட். நோயாளிகள் மீது நேரடிக் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, வென்டிலேட்டர்கள், கார்டியோவஸ்குலர் பேராமீட்டர் போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் வாயிலாக தொடர்ந்து கண்காணிப்பதும் அவர்களது முக்கிய பணி. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தவிர, நவீன தொழில்நுட்பம் வாயிலாக உயிர்காக்கும் அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்யபவர்கள், கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜிஸ்ட்.


பேச்சுலர் ஆப் சயின்ஸ் கிளினிக்கல் நியூட்ரிஷன்


படிப்பு காலம்: 3 அல்லது 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி


பணிவிபரம்: நோயாளிகளின் சிகிச்சை காலம் மற்றும் சிகிச்சைக்கு பிறகான காலக்கட்டத்தில் சரியான உணவு முறை மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குபவர்கள் கிளினிக்கல் நியூட்ரிஷன் படித்தவர்கள். டயட்டிக்ஸ் மற்றும் நியூட்ரிஷன் படிக்கும் இத்தகைய மாணவர்களுக்கு, மருத்துவமனைகளில் வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. போதிய அனுபவத்திற்கு பிறகு சுயமாகவும் செயல்படலாம். கல்வி சார்ந்த பணிவாய்ப்புகளும் பிரகாசம். பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் யூரோலஜி டெக்னாலஜி


படிப்புகாலம்: 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி


பணிவிபரம்: இப்படிப்பின் வாயிலாக, சிறுநீரகம் குறித்த அடிப்படை அறிவோடு, இத்துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைகள் குறித்து உரிய பயிற்சியும் பெற்றவர்கள், சிறுநீரக இயக்கவியல், உடல் சார்ந்த அதிர்ச்சி அலை வாயிலான லித்தோடிரிப்சி  செயல்முறைகள், என்டோஸ்கோபி மற்றும் சிறுநீரகம் சார்ந்த பல்வேறு நோய்களை பரிசோதிக்கும் பணியில் ஈடுபடலாம். பொதுவாக, சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களது நோயின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளலாம்.பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் பாரின்சிக் சயின்சஸ்


படிப்புகாலம்: 3 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் அல்லது கணித பாடப்பிரிவில் தேர்ச்சி


பணிவிபரம்: வேதியியல், உயிரியல், உளவியல், சமூக அறிவியல், பொறியியல், நிலவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள் இணைந்த இத்துறையில், குற்ற பகுப்பாய்வு நுட்பங்கள், ஆய்வக நுட்பங்கள், மனித உடலமைப்பு மற்றும் மரபியல் ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு விபத்து அல்லது குற்ற சம்பவத்தில், முடி, உடல் திரவங்கள், கண்ணாடி, ஓவியம், மருந்துகள் என பல்வேறு சிறு சிறு காரணிகளை கண்டறிவதோடு, அவற்றைக் கொண்டு டி.என்.ஏ. புரொபைலிங், ஸ்பெக்ரோமெட்ரி, குரோமடோகிராபி போன்ற வழிமுறைகளின் படி ஆய்வகங்களில் ஆராய்ந்து, அச்சம்பவத்தின் குற்றப் பின்னணியை கண்டறியும் திறனும் அவசியமாகிறது.பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் மெடிக்கல் சோசியாலஜி


படிப்புகாலம்: 4 ஆண்டுகள்


கல்வி தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி


பணிவிபரம்: மனித உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்களின் தன்மை குறித்த சமூக கட்டமைப்பு மட்டுமின்றி, நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை மற்றும் அவர்களது செயல் நடவடிக்கை ஆகியவற்றையும் இப்படிப்பின் வாயிலாக கற்றுக்கொள்ளலாம். குடும்ப ஆலோசனை நிபுணர், வலிநிவாரண பணியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, சுகாதார திட்ட மேலாளர், மருத்துவமனை தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். மருத்துவமனை நிர்வாகத்தோடு மட்டுமின்றி, மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, மருத்துவ முறைகளால் ஏற்படும் சமூக, பண்பாட்டு மாற்றங்களை கண்டறியவும், அவற்றிற்கு உரிய தீர்வு காணும் முக்கிய பணியையும் மேற்கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us