ரீச் ஆக்ஸ்போர்டு உதவித்தொகை | Kalvimalar - News

ரீச் ஆக்ஸ்போர்டு உதவித்தொகைசெப்டம்பர் 10,2019,11:29 IST

எழுத்தின் அளவு :

உலகளவில் பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரிகளில் படிக்க விரும்பும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ‘ரீச் ஆக்ஸ்போர்டு  ஸ்காலர்ஷிப்’ திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பெறும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

வழங்கப்படும் படிப்புகள்:
ஆர்கியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயாலஜி, பயோமெடிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியாலஜி, எக்னாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், இன்ஜினியரிங் சயின்ஸ், இங்கிலீஷ் லேங்குவேஜ் அண்ட் லிட்ரெச்சர், பைன் ஆர்ட்ஸ், ஜியாலஜி, ஹிஸ்ட்ரி, ஹுமன் சயின்சஸ், லா, மெட்டீரியல்ஸ் சயின்ஸ், மேத்மெடிக்ஸ், மியூசிக், பிலாசபி, பிசிக்ஸ், சைக்காலஜி, தியாலஜி அண்ட் ரிலிஜன் உட்பட மருத்துவம் தவிர பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகள் உதவித்தொகை பெற தகுதிபெறுகின்றன.

உதவித்தொகை: 
கல்வி கட்டணம், உணவு மற்றும் தங்கும் விடுதிக்கு ஆகும் செலவு, விமான கட்டணம்.

உதவித்தொகை காலம்: 3 அல்லது 4 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: 
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், படிப்புகாலம் முடிந்த பிறகு திரும்ப சொந்த நாட்டிற்கே திரும்ப செல்லும் எண்ணம் கொண்டவராக இருக்கவேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
யு.சி.ஏ.எஸ்., எனும் யுனிவர்சிட்டிஸ் அண்ட் காலேஜஸ் அட்மிஷன் சர்வீஸ் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், கல்வி மற்றும் இதர சாதனைகள் குறித்து தொடர்ந்து தெரியப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

விண்ணப்பிக்கும் காலம்: 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் அட்மிஷன் மற்றும் உதவித்தொகை பெற அக்டோபர் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2020ம் ஆண்டு மார்ச் மாதம் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us