சி.ஜி.ஐ., ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

சி.ஜி.ஐ., ஸ்காலர்ஷிப்ஆகஸ்ட் 28,2019,11:41 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச அளவிலான சிந்தனையாளர்கள் மற்றும் இளம் தலைவர்களை உருவாக்கும் நோக்கில், தாய்லாந்தில் உள்ள சுலாபோர்ன் கிராஜுவேட் இன்ஸ்டிடியுட்- சி.ஜி.ஐ., கல்வி நிறுவனம் ’ஏசியான்’ அல்லாத நாட்டு மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகிறது.


சி.ஜி.ஐ., கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் 10 சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


பாடப்பிரிவுகள்: 

* அப்ளைடு பயோலஜிக்கல் சயின்ஸஸ்: என்விரான்மெண்டல் ஹெல்த்

* என்விரான்மெண்டல் டாக்சிகாலஜி

* கெமிக்கல் சயின்சஸ்


தகுதிகள்: 

* ஏசியான் அமைப்பு நாடுகளில் இடம்பெறாத நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். 

* 30 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும். 

* கெமிஸ்ட்ரி, பயோலஜி, பயோலஜிக்கல் சயின்சஸ், மாலிகுளர் பயோலஜி, என்விரான்மெண்டல் சயின்சஸ், மெடிசின், மெடிக்கல் டெக்னாலஜி, பார்மசி அல்லது பார்மசூட்டிக்கல் சயின்சஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தது 3.00 ஜி.பி.ஏ., புள்ளிகளுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

* அறிவியல் சார்ந்த ஆய்வக ஆராய்ச்சிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., ஆங்கில மொழிப்புலமை தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


உதவித்தொகை:

கல்விக்கட்டணம் மற்றும் அனைத்துவிதமான கல்வி சார்ந்த கட்டணம், விமானக்கட்டணம், விசா கட்டணம், இடமாற்று சலுகைகள், தங்குமிடம், மாத உதவித்தொகை, புத்தகம் வாங்குவதற்கான செலவுகள், மருத்துவ காப்பீடு மற்றும் இதர செலுவுகள் இந்த உதவித்தொகை திட்டத்தில் வழங்கப்படுகிறது. 


உதவித்தொகை காலம்: 

6 வாரகால புத்துணர்வு படிப்பு மற்றும் 2 ஆண்டுகால முதுநிலை பட்டப்படிப்பு.


விண்ணப்பிக்கும் முறை: 

கல்வி சான்றுகள், மூன்று பரிந்துரை கடிதங்கள், மாணவரின் சுய விளக்கக் கடிதம், மருத்துவ சான்றுகள் மற்றும் இதர சான்றுகளுடன் இ-மெயில் வாயிலாக சி.ஜி.ஐ., கல்வி நிறுவனத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். 


இமெயில் முகவரி: cgi_academic@cgi.ac.th


விபரங்களுக்கு: www.cgi.ac.th

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us