சுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு வித்திடும் | Kalvimalar - News

சுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு வித்திடும்ஜூன் 25,2019,14:22 IST

எழுத்தின் அளவு :

பள்ளிப்படிப்பை முடித்து தனக்கான கல்லுாரிகளையும், படிப்புகளையும் பெரும்பாலான மாணவர்கள் இந்நேரம் முடிவு செய்திருப்பர். ஒவ்வொரு மாணவரும் தனது வாழ்கையின் அடித்தளத்தை வலுவாக அமைக்கவேண்டிய காலமே இந்த கல்லுாரி காலம். படிக்கும் துறை எதுவாயினும் அத்துறை மட்டுமின்றி, பல்துறை திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். 

அத்துடன், இன்றைய தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் சுயஒழுக்கத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். சமூக வலைத்தளங்களை தேவைக்கு ஏற்ப வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள். சுயஒழுக்கத்துடன் இணையும் திறமை என்றும் வெற்றிக்கான வழிதடத்தை உருவாக்கிதரும். 

கலை, அறிவியல், பொறியியல் என அனைத்து படிப்புகளுக்கும் இன்று வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதற்கான திறன்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டியது மாணவர்களின் பொறுப்பு.  மாணவர்களின் திறன்களும், திறமைகளுமே அவர்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கி, வேலைவாய்ப்பையும் எளிதாக பெற்று தந்துவிடும். அதற்கேற்ப, தன்னாட்சி தகுதிபெற்றுள்ள எங்கள் கல்விநிறுவனங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மேம்படுத்தியுள்ளோம். 

இந்தாண்டு, பி.காம்., தொழில்முனைவோர் படிப்பை புதிதாக துவக்கியுள்ளோம். மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இன்டர்ன்ஷிப் கட்டாயமாக்கியுள்ளோம். இதன்மூலம், 20 சதவீத மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு படிக்கும் முன்பே உறுதியாகிறது. ஐ.ஐ.டி.,யுடன்., இணைந்து ‛ஆன்லைன்’ படிப்புகள், மலாயா, துபாய், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைகளில் கல்வி என பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். 

இன்போசிஸ், டி.சி.எஸ்., யு.டி.எல்., போன்ற தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அவற்றின் தேவை அடிப்படையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தப்படுத்துகிறோம். குறிப்பாக, மத்திய அரசு, பல்வேறு தொழில்நிறுவனங்கள் நடத்தும் தொழில்நுட்ப போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிப்பதுடன், எங்கள் கல்லுாரி சார்பிலும் பல்வேறு போட்டிகளை நடத்துகிறோம்.   

கல்விக்கு இணையாக ஆராய்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 5 காப்புரிமைகளை மாணவர்களும், ஆசிரியர்களும் பெற்றுள்ளனர். எங்கள் கல்விநிறுவனத்தில், சமூக அமைப்புகளுக்கும் இலவச இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கல்வி போன்றவற்றில் சாதித்த மாணவர்களும், திறன்மிக்க மாற்றுத்திறனாளி மாணவர்களும் பொருளாதார சூழல் காரணமாக கல்வியை தொடர முடியவில்லை எனில் தற்போதும் எங்கள் கல்லுாரிகளை நேரடியாக அணுகலாம். தகுதியுடைய மாணவர்களுக்கு நிச்சயம் உயர்கல்வி உறுதிசெய்யப்படும்.  
 
மொத்தத்தில், கல்வி நிறுவனங்கள் என்பவை வேலைவாய்ப்புக்கு மாணவர்களை தயார்படுத்திக்கொள்ளும் ஓர் தளமாக மட்டும் அல்லாமல் அறிவையும், பல்வேறு திறன்களையும் மேம்படுத்தி தகுதியான குடிமகனை சமூகத்திற்கு வழங்கும் வழிகாட்டியாக இருக்கவேண்டும். அவற்றையே குறிக்கோளகக் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம்!

-சரஸ்வதி கண்னையன், நிர்வாக அறங்காவலர், இந்துஸ்தான் கல்விநிறுவனங்கள், கோவை

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us