பல்துறை அறிவே சாதனைக்கு வழி! | Kalvimalar - News

பல்துறை அறிவே சாதனைக்கு வழி!ஜூன் 22,2019,08:56 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்களில் 60 சதவீதம் பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையை எடுத்து படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். என்னைப்பொருத்தவரை, இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட துறை மட்டுமின்றி, பல்வேறு துறைகள் சார்ந்த அறிவையும் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனினில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கார் என்பது ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியரது பணி அல்லது ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரது பணியாக கூறப்பட்டது. ஆனால், இன்று கார் ஒன்பது ஒரு தனிப்பட்ட துறை சார்ந்த பணி என்று சொல்லவே முடியாது. ஏனெனில், அதில் மெக்கானிக்கல் இன்ஜினியரது பணி மட்டுமின்றி, ஒரு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரது பங்களிப்பும் அடங்கியுள்ளது; கம்ப்யூட்டர் இன்ஜினியரது பங்களிப்பும் அடங்கியுள்ளது. இவை பல்துறை இணைந்த செயல்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்கள்

ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகிய வளர்ந்துவரும் துறைகளில் திறன்களை வளர்த்துக்கொள்ள கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மட்டும் படித்தால் போதுமா என்றால்? நிச்சயமாக போதாது. இண்டஸ்ட்ரி 4.0 நிலையை அடைய அனைத்து தொழில் நிறுவனங்களுமே ஆட்டோமேஷன் செய்ய வேண்டியுள்ள இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரம் அவசியமாகிறது. அப்போதுதான், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பல புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும். 

இண்டஸ்ட்ரி 4.0 நிலையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியருக்கு அர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், அவரது துறையிலேயே எவ்வாறு பயன்படும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதற்கு ஒரு கம்ப்யூட்டர் இன் ஜினியரது உதவியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தான் ஹெல்த்கேர் உட்பட அனைத்து துறைகளும், இதர பல துறைகளுடன் ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன. இத்தகைய சூழலில், டேட்டா என்பது முக்கிய இடம் பெறுகிறது. ஏராளமான டேட்டா என்று வரும்போது, அவற்றை முறையாக பராமரிப்பதும், பயன்படுத்துவதும் மற்றும் பாதுகாப்பதும் அவசியமாகிறது.

ஆன்லைன் படிப்பு

இன்று மற்றுமொரு வளர்ந்துவரும் துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன். எனவேதான், இப்படிப்பை எங்கள் கல்லூரியில் அறிமுகப்படுத்தி உள்ளோம். அதோடு மட்டுமின்றி, ராணுவ பாதுகாப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப பயன்பாடு, ஆட்டோமேஷன், டேட்டா, செக்யூரிட்டி ஆகியவற்றிற்கு பெயர்பெற்ற இஸ்ரேல் நாட்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். 

மேலும், ஒவ்வொரு மாணவரும் கல்லூரி பாடங்கள் தாண்டி, ஆன்லைன் வாயிலாக பல குறுகிய கால படிப்பை படித்து திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆனலைன் படிப்பை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் எங்கள் கல்லூரியில் வழங்குகிறோம். பொதுவாக, மாணவர்கள் எந்த துறையாக இருந்தாலும், முழுஈடுபாட்டுடன் படித்து, இதர துறை சார்ந்த திறன்களையும் வளர்த்துக்கொண்டால், நிச்சயம் வாழ்வில் சாதனை படைக்கலாம்.

-டாக்டர் அலமேலு, முதல்வர், ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us