கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துங்கள் | Kalvimalar - News

கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துங்கள்ஜூன் 20,2019,13:38 IST

எழுத்தின் அளவு :

தமிழகத்தில், 1,500க்கும் மேற்பட்ட கலை கல்லூரிகளில் சுமார் 5 லட்சம் இடங்களும், 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் 3 லட்சம் இடங்களும் உள்ளன. இவற்றில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் அனைவருக்கும் இளநிலை பட்டப்படிப்பு படிக்க இடம் உண்டு. தனியார் கல்லூரிகளால் தான் இத்தகைய வாய்ப்பு சாத்தியமாகி உள்ளது என்பதில் பெருமையே!

ஆனால், சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டேமேயானால், பல நாடுகளில் இளநிலை பட்டப்படிப்பை விட, முதுநிலை பட்டப்படிப்பு படிப்போரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதும் இதற்கு ஒரு காரணம். ஆராய்ச்சி செய்வோரின் எண்ணிக்கையும் வளர்ந்த வெளிநாடுகளில் அதிகமாகவே உள்ளது.

ஆய்வுகள் அதிகம் வேண்டும்

பொறியியல் படித்தவர்களுக்கு ஐ.டி., துறை அதிகமாகமான வேலைவாய்ப்பை வழங்குகின்றன. உற்பத்தித் துறையைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, அவற்றை இயக்குவதற்கான பணியே மாணவர்களுக்கு வழங்கப்படுவதால், இத்துறையில் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றால், நம் நாட்டிலேயே இயந்திரங்களையும், புதிய தொழில்நுட்பத்தையும் தயாரிக்கும் வகையில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பையும், ஆராய்ச்சி படிப்பையும் மேற்கொள்ள வேண்டும். 

நமது தொழில் நிறுவனங்கள் புதியதாக தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்காமல், பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்திவருவதால், அதில் போட்டிகளும் அதிகம்; ஊதியமும் குறைவு. உதாரணத்திற்கு, 
குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியா கடந்த 20 ஆண்டுகளில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஏனெனில், அங்கு 10 லட்சம் பேருக்கு 6,800 பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், நமது நாட்டில் அதே 10 பேருக்கு 100 பேர் தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நமது நாட்டிலுள்ள மக்கள் தொகையை ஒப்பிடும்போது, நாம் இன்னும் பல நூறு மடங்கிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.

உதவித்தொகை

அதிக ஆய்வுகள் செய்தால் மட்டுமே நம் நாடு முன்னேற்றம் காணும் என்ற நிலையில், முதுநிலை படிப்புகளை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில், முதுநிலை படிக்கும்போதே, இரண்டாவது ஆண்டில் மாணவர்களை தொழில்நிறுவனத்துடன் இணைத்துவிடுவதோடு, மாதம் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை அந்நிறுவனத்தால் வழங்க செய்கிறோம். மேலும், இளநிலை பட்டப்படிப்பில் 80 சதவீத மதிப்பெண் பெற்று முதுநிலை படிப்பவர்களுக்கு கல்லூரியின் சார்பில் பிரத்யேகமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. பிஎச்.டி., படிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2025ம் ஆண்டில் எங்களது கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பிஎச்.டி., படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு!

-எஸ்.தங்கவேலு, தலைவர், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோவை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us