வகுப்பறை பாடம் மட்டுமல்ல கல்வி | Kalvimalar - News

வகுப்பறை பாடம் மட்டுமல்ல கல்விஜூன் 15,2019,11:34 IST

எழுத்தின் அளவு :

பசுமையான சுற்றுச்சுழலில் அமைந்துள்ள எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும் வகையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறோம். வகுப்பறை என்ற நான்கு சுவர்களுக்குள் கற்பிக்கப்படும் பாடங்கள் மட்டுமே கல்வி என்று அர்த்தம் அல்ல. 

மாணவர்கள், இயந்திரம் போல செயல்படாமல், நற்பண்புகள் நிறைந்த சிறந்த மனிதர்களாக உருவாகவே விரும்புகிறோம். ஆகவேதான், மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், விளையாட்டு, ஆங்கில மொழிப் பயிற்சி உட்பட கூடுதல் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்குகிறோம். 

கல்வியோடு, வெளி உலக அனுபவம், உடல் மற்றும் மனம் சார்ந்த வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிப்பதே எங்கள் பள்ளியின் தனித்துவமான அணுகுமுறை. எங்கள் பள்ளி கிராமப்புறத்தில் அமைந்திருந்தாலும், நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வளர்ச்சி வாய்ப்புகள், அனைத்தும் எங்கள் மாணவர்களுக்கும் வகையில், தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்க ஊக்கம் அளிக்கிறோம். சுயமாக கற்பதே, சிறந்த கல்வி என்பது எனது கருத்து. 

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், சுயமாக ஆராய்ந்து அறியும் சூழலை மாணவர்களுக்கு உருவாக்கித்தருகின்றன. என்ன படிக்க வேண்டும் என்பதை மாணவர்களே தீர்மானிக்கின்றனர். உலகிலேயே சிறந்த கல்வி முறையைக் கொண்டுள்ள பின்லாந்து நாட்டில், குழந்தைகளின் மூளை நன்கு வளர்ந்த நிலையில், 7ம் வயதில் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகிறார்கள். குழந்தைகள் வகுப்பறைகளில் முடங்கிக்கிடக்காமல், பெரும்பாலான நேரத்தை வெளி உலகில், இயற்கையை ரசித்தபடியும், சக மனிதர்களுடன் கலந்துரையாடிய படியுமே செலவிடுகின்றனர். 

கல்வி கற்பதில் எந்த அழுத்தமும் குழந்தைகளுக்கு தரப்படுவதில்லை. மிகவும் மகிழ்வான மனநிலையில் கல்வி கற்கிறார்கள். மகிழ்வாக உணவு அருந்துகிறார்கள். அதுபோன்ற கல்வி கற்கும் சூழல் இந்தியாவிலும் சாத்தியம் தான். ஆனால், அதற்கு சில காலங்கள் ஆகும். ஓரிரு நாட்களில் மாற்றம் சாத்தியமில்லை. எங்கள் பள்ளியை, மிகச் சிறந்த பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். 

-அப்ரஜிதா, தாளாளர், கண்ணம்மாள் நேஷனல் ஸ்கூல், பல்லடம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us