காமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா? | Kalvimalar - News

காமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தொன்று தொட்டு பிளஸ் 2ல் காமர்ஸ் படிப்பவருக்கான படிப்பாக பி.காம்., தான் இருந்து வந்துள்ளது. ஆனால் நவீன யுகத்தின் கட்டாயமாக புதிய படிப்புகளும் இத்துறையில் உருவாகியுள்ளன. இவற்றில் சில இன்னமும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனாலும் வெகு விரைவில் இவை இங்கும் அறிமுகப்பட்டுவிடும் என நம்பலாம். இப்போது பி.காம்., (பாங்கிங் மற்றும் இன்சூரன்ஸ்), பி.காம்., (அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ்) போன்ற படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு படு கிராக்கியாக சீட்டுகள் நிரம்பி விடுகின்றன. பாங்கிங் மற்றும் இன்சூரன்ஸ் பி.காமானது பாங்கிங் துறையின் இப்போதைய கடுமையான ஊழியர் தேவையை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் மகளை சி..,கம்பெனி செகரட்டரி போன்ற சிறப்புத் தொழிற்படிப்புகளிலும் சேர்ப்பது பற்றி யோசிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us