ரிலாக்சாக படித்தால் சாதிக்கலாம் | Kalvimalar - News

ரிலாக்சாக படித்தால் சாதிக்கலாம்ஜூன் 11,2019,14:25 IST

எழுத்தின் அளவு :

ஒரு குழந்தை சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு உயர வேண்டும் எனில், படித்த பள்ளிக்கும், கற்பித்த ஆசிரியருக்கும் முக்கிய பங்கு நிச்சயம் உண்டு. மனஅழுத்தமில்லாத சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி கற்பாதலேயே, இப்பள்ளி தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சியுடன் சிறந்து விளங்குகிறது. 

கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இப்பள்ளியில், இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கல்வியோடு குணநலன்களும் மிக அவசியம் என்பதை உணர்ந்து இத்தனை ஆண்டுகளாக, எங்கள் பள்ளியில் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். புதிய பாடத்திட்டங்களை நன்கு அறிந்து, கல்வி கற்பிக்கும் வகையில், திறன்மேம்பாட்டு பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம்.

ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் உள்ளிட்ட பிரிவுகளில், கேள்வி வங்கிகளை தனித்தனியாக தயார் செய்து தருவதால், மாணவர்களுக்கு கல்வி கற்றல் என்பது மிக எளிதாக அமைந்துவிட்டது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களையும், அதிக மதிப்பெண் பெற ஊக்கம் அளிக்கிறோம்.

மன அழுத்தமில்லா கல்விமுறையே எங்களின் சிறப்பம்சம். இதனால், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதோடு பல்வேறு வகையான விளையாட்டிலும் மாநில, மாவட்ட அளவில் இடம்பிடிக்கின்றனர். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்றவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். மாணவருக்கு ஏற்படும் பிரச்னைகளை குறைதீர்ப்பு மன்றத்தில் கேட்டு உடனே தீர்வு கண்டு வருவதால் குழந்தைகள் மன அழத்தமின்றி, ‘ரிலாக்சாக’ படிக்கின்றனர். அதனால், கல்வி, விளையாட்டு, இதர பயிற்சிகள் அனைத்திலும் சாதனை படைக்கின்றனர்.

நீட் பயிற்சியும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வழங்கி வருவதால், மாணவர்களை மதிப்பெண் எடுக்க வைப்பது சுலபமாக உள்ளது. ‘அப்ஜெக்டிவ்’ கேள்விகள், ‘கிரியேட்டிவ்’ முறையில் கேட்டாலும், பதிலளிக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்துகிறோம். அலகு தேர்வு, திருப்புதல் தேர்வு என பாடம் வாரியாக தேர்வுகள் நடத்தி, அனைத்து பாடங்களிலும், மாணவர்களை திறம்பட செயல்பட வைக்கிறோம். 

இம்முறை, 30 சதவீத திறனாய்வு வினாக்கள் இடம்பெற்றிருந்ததால், மாணவர்கள் எளிதாக எதிர்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட தரவரிசை முறை இருந்தபோதே, எங்கள் பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்து விடுவர். நீட் தேர்வு அறிமுகப்படுத்தபடுவதற்கு முன்பே, எங்கள் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லுாரிகளில் அதிகளவு இடம்பிடித்துள்ளனர். இப்போது நீட் மதிப்பெண் அடிப்படையிலும் அதிகளவு இடம்பிடித்து வருகின்றனர். உயர்கல்விக்கான ஆலோசனை வழங்க, கவுன்சிலிங் பிரிவும் பள்ளியிலேயே பிரத்யேகமாக செயல்படுகிறது. 

–சுப்ரமணியன், தாளாளர், விவேகம் பள்ளி, தாராபுரம்.  

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us