சர்வதேச திறன்களை வளர்க்கிறோம்! | Kalvimalar - News

சர்வதேச திறன்களை வளர்க்கிறோம்! மே 18,2019,17:49 IST

எழுத்தின் அளவு :

கோவை மெடிக்கல் சென்டர் ரிசர்ச் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட்-ன் கீழ்,  நர்சிங், பிசியோதெரபி, பார்மசி, கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் பிரத்யேகமாக செயல்படுகின்றன. 

மருத்துவத் துறையில் இன்று ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருவதை உணர்ந்தே, நியூக்கிலியர் மெடிசின் டெக்னாலஜி, மெடிக்கல் பிசிக்ஸ், ஆக்குபேஷனல் தெரபி, ரெஸ்ப்ரேட்டரி தெரபி உட்பட வாய்ப்புகள் மிகுந்த பல படிப்புகளை வழங்குகிறோம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டுவரும் எங்களது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், வழக்கமான படிப்புகள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உடன் டேட்டா அனலைசிஸ், ஆன்லைன் படிப்புகள் உட்பட வாய்ப்புகள் அதிகம் உள்ள பல நவீன தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறோம். 

இன்ஜினியரிங் கல்லூரியில் வழங்கப்படும் 7 இளநிலை பட்டப்படிப்புகளில், 5 படிப்புகள் என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்றவை. ஆசிரியர் பயிற்சி கல்லூரியையும் நடத்துகிறோம். எந்த படிப்பை படித்தாலும், ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆன்லைன் படிப்பை படிக்க வேண்டும் என்று வலியுறுத்திகிறோம். அனைத்து மாணவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவதுடன், சமுதாயத்திற்கும் நன்மைபயக்கும் செயல்களில் ஈடுபடும் வகையில் செயல்பட வைக்கிறோம்.

பாடத்திட்டம் வெகுமாக மாற்றம் கண்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில், வகுப்பறைகளிலேயே நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கற்கும் அளவிற்கு கல்வியின் தரம் மேம்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, ஆசிரியர் பயிற்சியிலும் நவீன பாடத்திட்டம் மற்றும் தொழில்நுட்பத்தை எங்களது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மேம்படுத்துகிறோம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடர்பியல் பயிற்சி அளிப்பதோடு, ஜாப்பனீஸ் உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறோம். 

நேர மேலாண்மை, பொது இடங்களில் செயல்படும் விதம், பிறரிடம் சிறப்பாக பேசும் தன்மை உட்பட ‘பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்’ பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இவ்வாறு, சர்வதேச அளவில் இன்று தேவைப்படும் மற்றும் தலைசிறந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களிடம் மேம்படுத்துகிறோம். எங்களது அனைத்து கல்வி நிறுவனங்களிலும், கல்விக்கும், திறன் வளர்ப்பிற்கும் அளிக்கப்படும் அதே முக்கியத்துவத்தை ஒழுக்கத்திற்கும் அளிக்கிறோம். அதேபோல், விளையாட்டிற்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குகிறோம். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, இலவச கல்வியை வழங்குகிறோம்.

விருப்பத்திற்கேற்ப படியுங்கள்

மாணவர்கள், அவர்களது விருப்பத்திற்கு ஏற்பவே ஒரு படிப்பை தேர்வு செய்யவேண்டும். யாருடைய கட்டாயத்திலும் ஒரு படிப்பை தேர்வு செய்யக்கூடாது. அதேபோல், தனக்கு உகந்த படிப்பு எது என்பதை உணர்ந்து, அதை தேர்வு செய்து படிக்க வேண்டும். உதாரணமாக, அறிவியல் மற்றும் கணிதத்தில் முற்றிலும் ஆர்வம் இல்லாத ஒரு மாணவர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்கை பெறுவது சரியான தேர்வாக இருக்காது. அனைத்து மாணவர்களாலும், திறமையாக செயல்பட முடியும். கடவுளின் படைப்பில் ஒவ்வொரிடமும் ஒரு திறமை உள்ளது. அந்த தனித்திறமை எது என்பதை உணர்ந்து, அதற்கேட்ப செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்! 

-தவமணி பழனிசாமி, நிர்வாக அறங்காவலர், கோவை மெடிக்கல் சென்டர் ரிசர்ச் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், கோவை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us